Header Ads



ஜனாதிபதி மஹிந்த பஹ்ரைன் செல்கிறார்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜய த்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (28 ஆம் திகதி) பஹ்ரைன் நாட்டுக்குப் பயணமாகின்றார். 

இலங்கைக்கும் பஹ்ரைனுக்குமிடை யிலான இரு பக்க நல்லுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த இராஜதந்திர விஜயம் அமைந்துள்ளது. அந்த வகையில் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் இரு பக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று ஜனாதிபதியின் பேச்சாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மொஹான் சமரநாயக்க நேற்றுத் தெரிவித்தார். 

பஹ்ரைன் நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டு மன்னர் ஹமட் பின் இஸ்ஸா அல் கலீபாவுடன் இரு பக்க பேச்சுவார்த்தை நடாத்துவார். அதன் பின்னர் அந்நாட்டுப் பிரதமருடனும் எமது ஜனாதிபதி அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என்றும் அவர் கூறினார். 

ஜனாதிபதி அவர்களின் இவ்விஜயத்தின்போது பொருளாதார. சமூக. கலாசார, வர்த்தகத்துறைகள் தொடர்பான இருபக்க உடன்படிக்கைகளும் கைச்சார்த்திடப்படவுள்ளன. 

அதேநேரம், அந்நாட்டு வர்த்தக சமூகத்தினரின் மாநாட்டில் பங்குபற்றுவதுடன் அங்குள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

1 comment:

  1. (இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதைவிட சாவலாம்.)

    முஸ்லிம் நாடுகளை விட்டால் வேறு யார் நமக்கு கைகொடுப்பார், நம்மை சேர்த்தெடுப்பார்.


    ஆனால் உள் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன போன்ற நாய்களை வைத்துக்கொண்டு. நாட்டில் சமாதானம் பூத்துக்குலுங்குகின்றது. 30 வருடத்திற்கு பிறகு மக்கள் அதிலும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ்கின்றனர் என்ற வாய்கூசாத பொய்களைக்கூறும் குருடர்கள் கூட்டம்.

    இவைகளுக்கெல்லாம் அல்லாஹ் மிகவிரைவில் நல்லதொரு முடிவைத்தர அனைத்து முஸ்லிம்களும் தொழுது ஒவ்வொரு வேளையிலும் அதிகம் அதிகம் பிரார்த்திப்போம். இறைவன் கண்டிப்பாக நமக்கு உதவி செய்யக்காத்திருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.