Header Ads



நான் உண்மையான முஸ்லிம் என்றவகையில் மனவேதனை அடைந்துள்ளேன் - பைஸர் முஸ்தபா

முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்களின் புனித அல்குர் ஆனுக்கும் தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுபல சேனா அமைப்பினர் நடந்துகொள்ளும் விதத்தை அரசில் அங்கம் வகிக்கும் பிரதியமைச்சர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இத்தகைய அவர்களது செயலானது முஸ்லிம் மக்களுக்கிடையிலும் சிங்கள - பெளத்த சமூகங்களுக்கிடையிலும் மனக்கசப்பையும் விரிசலையும் ஏற்படுத்த வழிவகுக்கும். எனவே பொதுபலசேனா அமைப்பினர் இத்தகைய செயல்களை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கிடையிலும் நிலவும் உறவுகளை சீர்குலைக்க முனைந்து வருகிறார். இவர் கடந்த 2014.04.12 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள், என் கவனத்தை ஈர்க்க வைத்துள்ளதுடன் ஒரு உண்மையான முஸ்லிம் என்ற வகையில் இது தொடர்பில் நான் மன வேதனை அடைந்துள்ளதுடன் விரக்தியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். புனித அல்-குர்ஆனில் தக்கியா எனும் பெயரில் மற்றவர்களின் காணிகளை அபகரியுங்கள். அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனம் இருப்பதாக பொதுபலசேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது இவ்வாறானதொரு வசனம் இருப்பதாக தெரிவிப்பது உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய் என்பதை உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அறிவார்கள்.

இவ்வாறானதொரு வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதை நானும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புனித அல்-குர்ஆன் என்பது அல்லாஹ்வால் இறக்கப்பட்ட திருவசனங்களாகும். இவ் வசனங்கள் ஊடாக ஏனையோரை நிந்திப்பதோ அல்லது மானபங்கப்படுத்துவதோ அல்-குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமல்ல. அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு அற்புத வேதமாகவே அல்-குர்ஆன் அமைந்துள்ளது. புனித குர்ஆன் நம்பத்தகுந்ததும் உண்மையானதுமாகும். இதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இந்நிலையிலேயே பொதுபல சேனாவின் செயலாளர் குர்ஆனை அவமதித்துப் பேசி வருகிறார்.

ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்துப் பெசியிருப்பது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்பும் பல தடவைகள் இவவ்¡றான தகாத வார்த்தைகளினால் அல்-குர்ஆனை விமர்சித்துப் பேசியிருக்கிறார். இதனை அவர் வேண்டுமென்றே செய்து வருகின்றமை தெட்டத்தெளிவாகப் புரிகின்றது. 

நான் ஐக்கிய இலங்கை ஒன்றுக்காக மிகந்த விசுவாசம் வைத்துள்ளதோடு அதனைப் பாதுகாத்து கட்டியெழுப்புவதிலும் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றேன். இலங்கையின் ஒருமைக்காக இடைவிடாது துணிந்து பாடுபடவும் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினராக நான் கண்டி மாவட்டத்தில் தெரிவாகி வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டாலும், சிங்கள - பெளத்த மக்கள் அதிகமாக வாழும் தொகுதியிலேயே என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நன்றியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இதற்கு நன்றிக்கடனாக பெளத்தர்களின் சில முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளதோடு பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் அவர்களுக்காக மேற்கொண்டுள்ளேன். 

16 comments:

  1. Didn't you deplore before 12.4.2014. Pl stop your drama.

    ReplyDelete
  2. who tall your real muslim? if your real muslim your not going to vote for cassino.you and aswar .cader.fowzi all are real munafiq.

    ReplyDelete
  3. Mr. Faizer! Only God knows who is genuine Muslim, my be you are trying to save your skin here. You already know the open secret that BBS is your own Government supported terrorist group set against Muslim community, acting like mad dogs, you are part of the Government, it mean you too indirectly oxygenating to the current situation.

    While saving your masters, please don’t try to fool SL Muslims.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. iwalawu nalum komavil irunteerkala????
    allatu komaliyaka irunteerkala???
    ellai somaliyavil irunteerkala???
    neengal muslim enru neengal solthan teriyum...

    ReplyDelete
  6. sir
    your opinion is very late. if you hurt in your head please resign your parliament membership for holy quran.it is real objection

    ReplyDelete
  7. He voted for Casino and how he can tear for Quran...................First practice the Quran and Sunnah than you can talk other matters.

    ReplyDelete
  8. 'கசினோ'வுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் பெருந்தலைவர்களில் இவரும் ஒருவர்....... இவர் சொல்கிறார் 'நான் உண்மையான முஸ்லீம்' என்று.....??????????? எமது தலைவர்களின் மானம் கெட்ட நிலைப்பாடு......????????? இவருக்காக வாக்களித்தவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  9. yes brother M.Rizvi uvais that also Anura Dissanayaka He pointed out his mistake in public ,after that only he workup ...

    ReplyDelete
  10. Yes, I accept it Mohamed Rizvi Uvais, Thanks for your comment and teach him TROTH ISLAM.

    ReplyDelete
  11. after you support the CASINO in srilanka, people are started to talk about you, for hiding this issue, your starting to revolve the poltical ball, Mr.Musthafa we are not that much fools. go ahead with you stingy political chair.

    ReplyDelete
  12. I am sure who support for Casino this three of them not a real Muslims Allah will punish them this world & hereafter

    ReplyDelete
  13. You vored casina how can you worried about our muslim ummars.our muslim people not mad ok.you you making a drama.you are a labal muslims.how can you worried about Holly Quran.

    ReplyDelete
  14. Faizer thingking he is a real Muslim ,now real Muslim's knows who's voted for casino and pls stop talk about bbs now and mind your own bussiness , like you people llesson not been learn still.

    ReplyDelete
  15. முஸ்தபா...........நீங்கள் அத்தனைபேரும் உத்தமந்தானா?சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுபார்த்து சொல்லுங்கள் கொல்லை அடிப்பவன் வல்லள் என்ரும்கோயிலை இடிப்பவன் சாமீயென்ரும் சொல்கின்ரான் ஊளல் செய்பவன் யோக்கியன் என்ரும் ஊரை ஏமாற்ருகின்ரவன் உத்தமன் என்ரும்தான் வாழ்கின்ரான் சதிகாரகூட்டங்கள் இந்த பாடலையாவது ஒருதரம் கேலுங்கள் உங்கலுக்கு பொருத்தமா அப்போவே கவிஞ்யன் எலுதியிருக்கான்

    ReplyDelete
  16. According to me all are same who voted for CASINO and who were absent for vote....Depending our politicians are foolish....Lets be "IMAAN is to Believe, Even when an Overpowering tide of Evil surrounds You" and face the problems.....Otherwise never ever change the ground situation.............

    ReplyDelete

Powered by Blogger.