லிபியாவில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு நடவடிக்கை
லிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக அங்கிருக்கும் 14 இலங்கையர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
லிபியாவிலுள்ள இலங்கையர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வராத்திற்குள் அவர்களை வரவழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment