Header Ads



நான் பதவிகளைப் பெற்ற போதும், பள்ளிவாசலுக்கு வரத் தவறுவதில்லை - பிரதமர்


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தி நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்ய சிறு குழுக்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு அரசாங்கம் இடமளிக்காது என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண குறிப்பிட்டார். 

கம்பளை கஹட்டபிடிய பள்ளிவாசல் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா 28.04.2014 மாலை நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்த பின்பு நடைபெற்ற  கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

பௌத்த பிக்குகள் சிலர் முன்னெடுக்கும் மத ரீதியான செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. இச்செயற்பாடுகளை அரசாங்கம் அங்கீகரிக்கப் போவதில்லை. அத்துடன் சில அரசியல்வாதிகளும் குட்டையைக் குழப்ப முற்படுகின்றனர். ஆனால் நாட்டு மக்கள் இவற்றுக்கு ஏமாற்றமடைய மாட்டார்கள் 

ஒரு மதத்தைப் பின்பற்றும் போது மற்றைய மதங்களை மதிக்கப்ப பழகிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் மத்தியில் சகல மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். நான் தேர்தல் காலங்களில் எனது தேர்தல் பணிகளை இப்பள்ளிவாசலுக்கு வந்து விட்டுத் தான் ஆரம்பிப்பதுண்டு. அதேபோல் நான் பதவிகளைப் பெற்ற போது இப்பள்ளிவாசலுக்கு வரத் தவறுவதில்லை என்றார்.   


1 comment:

Powered by Blogger.