மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி - 2014
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் 2014ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
LICENTIATE COURSE IN ARABIC & ISLAMIC மற்றும் DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES ஆகிய பாடநெறிகளுக்கே புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஐந்தரை வருடங்களைக் கொண்ட LICENTIATE COURSE IN ARABIC கற்கைநெறியில் அல்குர்ஆன், அல்ஹதீஸ், உயர் தர ஷரீஆ, உயர் தர அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், தேர்வுப் பாடங்கள்ஆகியன கற்பிக்கப்படுகின்றன.
க.பொ.த (உ/த) பரீட்சை, அங்கீகரிக்கப்பட்டபல்கலைகழகம் ஒன்றில் கலைமாணி பட்டப் பரீட்சை (வெளிவாரி) என்பவற்றுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
இதற்கு மேலதிகமாக திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே திறமையானமாணவர்கள் பலர் எகிப்தின் அல் அஸ்ஹர், யெமனின் ஜாமிஅதுல் ஈமான் மற்றும் சவூதியில் உள்ள உம்முல் குரா, ஜாமியா இஸ்லாமியா ஆகிய பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்கானபுலமைப் பரிசில்களைப் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த (சா/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் (c) தரச் சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட மொத்தம் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன் 1996.01.01ஆம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல் வேண்டும் இத்தகைமைகளை கொண்டவர்கள் மாத்திரமே இக்கற்கை நெறிக்குஇணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்த கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் LICENTIATE என டைப் செய்து 0777345367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 20.04.2014ம் திகதிக்கு முன்னர் SMS பண்ணவும்.
இதேவேளை கல்லூரியின் இன்னொரு பிரிவாக வர்த்தகத் துறைகாணப்படுகிறது இது மூன்று வருடங்களைக் கொண்ட DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES கற்கை நெறி ஆகும் இதில் அல்குர்ஆன், அல்-ஹதீஸ், அரபு மொழி, இஸ்லாமியக்கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம்,தலைமைதுவகற்கை, போன்ற பாடங்களுடன் (க.பொ.த) உயர் தரப் பரீட்சைக்கான கணக்கீடு, வணிகக் கல்வி, பொருளியல் ஆகியபாடங்களும் கற்பிக்கப்படும்.
இக்கல்லூரியிலிருந்து 2013ஆம் ஆண்டு முதன் முறையாக க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கு வர்த்தகத் துறையில் தோற்றியோரில் 93 சதவீதமானோர் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம் உட்பட 5 பாடங்களில் (c) தரச்சித்தியுடன் தமிழ், உட்பட குறைந்தது 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன் 1996.01.01ஆம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல் வேண்டும்.மேற்கூறிய தகைமைகளைகொண்டவர்கள் மாத்திரமே இக்கற்கை நெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்த கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் DIPLOMA என டைப் செய்து 0777345367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு 20.04.2014ம் திகதிக்கு முன்னர் SMS பண்ணவும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0773171718, 0775052735, 0715262026 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ளமுடியும்.
புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை மே 3ஆம் மற்றும் 4ஆம்திகதிகளில் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
ஆழமான இஸ்லாமிய அறிவும் ஆன்மிகப் பண்புகளும் துறைசார்ந்த அறிவு, திறமைகளும்கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், திட்ட முகாமையாளர்கள், ஊர்மட்டத்தலைவர்கள், வழிகாட்டிகள், சமூக ஆய்வாளர்கள் போன்றோரை உருவாக்கும் பணியில்கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment