Header Ads



சவூதி அரேபிய மன்னரினால் இலங்கைக்கு 200 மெட்ரிக்தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு


சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு 200 மெட்ரிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் இதனை அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த பேரீச்சம் பழங்கள் இலங்கையின் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இலங்கை மற்றும் சவுதிக்கு இடையிலான சிறந்த உறவுக்கு இது சான்றாக அமைவதாகஇ இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

7 comments:

  1. சரியான முறையில் பங்கிடப்படுமா?

    சில வேளை புதிய பழங்களை பதுக்கி விற்பனைக்கு வைத்துவிட்டு முன்னர் பதுக்கி வைக்கப்பட்ட பழங்கள் பங்குவைக்க்பபடலாம். முன்னரும் அதுதான் நடந்திருந்தது, சென்ற நோன்பு மாதத்தில் சில இடங்களில் புளு ஏறிய பழங்களே பங்கிடப்பட்டது மட்டுமின்றி, சவூதி அறேபியா, ஈரான், கதர் போன்ற நாடுகளிலிருந்து பெருவளவிலான் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டும் மக்களுக்குக்கிடைத்தவை எவ்வளவு?

    ReplyDelete
  2. very good news for Muslim Cultural ministry members!

    ReplyDelete
  3. BBS இன் தலைவர் ஞானசார தேரருக்கும் 'சவுதி பேரீத்தம் பழம்' கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்களான அஸ்வர் பௌசி ரவுப் ஹக்கீம் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  4. 'தலைவருக்கும் அவரது குடும்பத்துக்கும்' பாதி போக..... மீதி ..... யாருக்கு எவ்வளவு போய்ச்சேர்ந்தது என்று சவுதி அரேபியா கேட்கவா போகிறது..... ??? சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி அரசாங்கம் வீடு கட்டிக்கொடுத்த மாதிரிதான்......! 200 மெட்ரிக் டொன்...???? பொறுப்பான அமைச்சர்களின் காட்டில் மழைதான்......!!!

    ReplyDelete
  5. Ranees MHM,

    No Comments....... Why.....? Could not Digest. KSA doing good things..

    ReplyDelete
  6. Muhammed Rasheed..


    No comments.. என்பதன் எனது அர்த்தம், சவுதி அரேபியா நல்லதை செய்வது பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதை நீர் எப்படி திட்டவட்டமாகச் சொல்லலாம். மேலேயுள்ள பின்னூட்டங்களைக்க கவனித்தீர்களா? அவைகளை முற்று முளுதாக நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதன் அர்த்தமே எனது பின்னூட்டத்தின் அர்த்தம். ஏற்கனவே நடந்தவைகளை வைத்து சொன்னேன் தவிர. சவுதி மன்னருக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.