Header Ads



ஒற்றைக்காலில் நின்று B.M.W. கார் வென்ற சீன நாட்டவர்

அதிக நேரம் ஒற்றைக்காலில் நிற்பவருக்கு புத்தம் புதிய பி.எம்.டபிள்யு.எக்ஸ்1 கார் ஒன்றை பரிசாக வழங்கும் போட்டி ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. இதில் பரிசாக வெல்லும் காரை ஒரு கையால் பற்றிக்கொண்டு ஒற்றைகாலில் நீண்ட நேரம் நிற்பவரே போட்டியில் வெல்பவராக கருதப்படுவார். 

சீனாவின் ஜpயங்'p மாகாணத்தில் கடந்த மார்ச் முதலாம் திகதி ஆரம்பமான போட்டியில் 140 பேர் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் 20 பேர் போட்டியிட்டனர். காலை 9.30 மணிக்கு ஒற்றைக் காலில் நிற்க ஆரம்பித்த போட்டியாளர்கள் பகல் 1.30 ஆகும்போது வேதனையை உணர ஆரபித்தனர். 

இதன்போது போட்டியாளர்கள் ஒற்றைக்காலின் விரல் நுனியில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை உறுதிசெய்ய ஏற்பட்டாளர்கள் பாதத்திற்கு கீழ் மா தூளை வைத்தனர். தனது குதிக்காலை நிலத்தில் வைக்கும்போது அதில் மா ஒட்டிக்கொள்வதால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த கடுமையான போட்டி பின்னேரம் 3.56 மணியாகும்போது முடிவுக்கு வந்தது. போட்டி ஆரம்பித்து 7 மணி 26 நிமிடங்களுக்கு பின்னர் வு கீ என்பவர் மாத்திரம் விரல் நுனியால் ஒற்றைக்காலில் நின்று பி.எம்.டபிள்யு காரை வென்றார். 

எனினும் அதிக நேரம் ஒற்றைக் காலில் நின்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவராக சுரேஷ் ஜோச்சி என்பவரே இருக்கிறார். இவர் 76 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார்.

No comments

Powered by Blogger.