Header Ads



லயோனல் மெஸ்சி சாதனை


பார்சிலோனா: ஒசாசுனா அணிக்கு எதிரான ‘லா லிகா’ கால்பந்து போட்டியில், ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

பார்சிலோனாவில் நடந்த ‘லா லிகா’ கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பார்சிலோனா, ஒசாசுனா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பார்சிலோனா அணி 7–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா சார்பில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி ‘ஹாட்ரிக்’ கோல் (18, 63, 88வது நிமிடம்) அடித்தார்.

மூன்றாவது இடம்:

இதுவரை விளையாடிய 28 போட்டியில் 21 வெற்றி, 3 ‘டிரா’, 4 தோல்வி உட்பட 66 புள்ளிகள் பெற்ற பார்சிலோனா அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் ரியல் மாட்ரிட் (70 புள்ளி), அத்லெட்டிக் மாட்ரிட் (67 புள்ளி) அணிகள் உள்ளன.

புதிய சாதனை:

இப்போட்டியில் மெஸ்சி, தனது இரண்டாவது கோல் அடித்த போது, ‘லா லிகா’, ‘கோபா டெல் ரே’, சர்வதேச மற்றும் நட்பு ரீதியிலான கிளப் அணிகள் மோதும் போட்டிகளில், பார்சிலோனா அணிக்காக ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 371 கோல் அடித்துள்ளார். இதன்மூலம் மற்றொரு பார்சிலோனா வீரர் பிலிப்பைன்சின் பவுலினோ அல்கான்டராவின் (369 கோல்) சாதனையை முறியடித்தார். இப்பட்டியலின் 3, 4வது இடத்தில் முறையே ஸ்பெயினின் ஜோசப் சமிடியர் (333), சீசர் ரோட்ரிகுயஸ் (301) உள்ளனர்.

No comments

Powered by Blogger.