முஸ்லிம் காங்கிரஸ் இதயசுத்தியுடன் முன்வர வேண்டுமாம் - நிபந்தனை விதிக்கும் செல்வம் அடைக்கலநாதன்
(Sfm)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களின் அரசியல் நோக்கங்களை கைவிட்டு, இதயசுத்தியுடன் முன்வருமாக இருந்தால், அதனோடு இணைந்து செயற்பட தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும், இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றி இருந்தது.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு தீர்வு ஒன்றை எட்ட முடியாது.
எனவே முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயராக இருக்கிறது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு தமது அரசியல் நோக்கங்களை களைந்துவிட்டு வர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
.jpg)
முஸ்லிம்களின் அரசியல் பயணமும் (மதம், பொருளாதாரம், பரந்துபட்டு வாழும் தன்மை..) தமிழர்களின் ( TNA) அரசியல் பயணமும் வேறு வேறானவை என்பதை இந்த தமிழ் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளல் வேண்டும்.. சிலவிடயங்களில் ஒற்றுமை உண்டு என்பதற்காக.. சும்மா உங்களது விரலை பிடித்துக் கொண்டு பயணம் செய்வதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் அரசியல் ராஜதந்திரம் புரியாதவர்களும் அல்ல. மிகவும் ஆழமாகவும் பொறுப்புடனும் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ReplyDeleteTNA-தமிழ் அரசியல் வாதிகளின் வார்த்தை பிரயோகம் மிகவும் கவனமாக கையாளப் பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்பது மிகவும் கண்ணியமான பக்குவமான ஒரு இனத்தின்( இலங்கையில் எல்லா மூலை முடுக்குகளில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை, அபிவிரித்தியை, அரசியல் உரிமைகைளை, பாமரமக்களின் அன்றாட வாழ்க்கை பதிக்காத வகையில்) கட்சியாகும். TNA ஏமாற்ற பட வில்லை.. மாறாக, முஸ்லிம் காங்கிரசின் முடிவால் TNA ஏமாற்றம் அடைந்தது.
வேண்டாம் அதை எதிர்பார்க்வே வேண்டியதில்லை ஐயா, நீங்கள் உங்கள் வழியைப்பாருங்கள் அவர்கள் அவர்களது வழியைப்பார்க்கட்டும். உங்களுக்குள்ளேயே எத்தனை கூட்டும் எத்தனை பிரச்சினையும் இதில முஸ்லிம்கள் சேர்ந்து உங்களுடன் ஒன்றையும் கிழிக்கப்போவதில்லை.
ReplyDelete