சவூதி அரேபிய கோடீஸ்வர பெண்ணின் தாராள மனசு..!
கண்பார்வையற்ற கோடீஸ்வர பெண்மணி ஒருவர் தனது சொத்தாக மூன்று மில்லியன் ரியால்கள் பணம், நகைகள், ஒரு மில்லியன் ரியால்கள் மதிப்புள்ள தங்கம் அத்துடன் நான்கு கட்டடங்கள் ஆகியவற்றை விட்டு விட்டு இறந்து போயுள்ளார். மேலும், தனது சொத்துகள் யாவற்றையும் தேவையுடையவர்க்குப் பகிர்ந்து அளிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயிஷா என்ற பெயருடைய அப்பெண்மணியின் உதவியாளராக இருந்து வந்த அஹ்மத் சைதி என்பவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தேவையுடையவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் படி ஆயிஷா விடுத்திருந்த கோரிக்கை அரசு அதிகாரிகளுக்குத் தான் தெரிவித்து விட்டதாகக் கூறிய அஹ்மத் சைதி, "அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
தனது நேர்மையை நிரூபிக்கும் விதமாக அஹ்மத் அடுத்து செய்த காரியம் விசித்திரமானது: இறந்த பெண்மணியின் பணம், நகைகளை ஒரு பெட்டியில் வைத்து பலத் எனப்படும் நகர் மையப் பகுதியில் அவற்றை வறியவர்கள் எடுத்துச் செல்லும் விதமாக விட்டுச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்மணிக்குச் சொந்தமான நான்கு கட்டடங்களில் வறியவர்கள் தங்கியுள்ளதாகவும், காலத்திற்கும் அவர்கள் தங்கிக் கொள்ள அப்பெண்மணி அனுமதித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. Inne

Post a Comment