சிறுமியின் கால்களுக்கு சூடுவைத்த ஆசிரிய ஆலோசகருக்கு விளக்கமறியல்
(Nf) சிறுமியின் கால்களுக்கு சூடுவைத்த ஆசிரிய ஆலோசகர் விளக்கமறியலில்
பூஜை எனும் பெயரில் சிறுமி ஒருவரின் கால்களுக்கு இரும்புக் கம்பியால் சூடுவைத்து காயமேற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தினால் இன்று 18-03-2014 இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக, சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய ராஜா ஸ்ரீ மேவன் மகேந்திரராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமி தொடர்பில் மருத்துவ அறிக்கையினை பெற்று அடுத்தகட்ட வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment