Header Ads



பொதுப்பல சேனாவை “சர்வதேச விசாரணைக்கு” உட்படுத்த வேண்டும்

(றிசானா பசீர்)

இன்று நாட்டில் குழப்பத்துக்கும் அமைதியின்மைக்கும் காரணியாக இருப்பது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அல்ல. ஐ.நா ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம் காங்கிரசினால் வழங்கப்பட்ட அறிக்கையில் அரசாங்கத்தை சாடியிருக்க கூடாது. பதிலாக கடும் போக்குடைய பொதுபலசேனாவையும் ராவனா பலயயையும் குறிப்பாக சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியதாவது--  ”வரம்பு மீறி செயற்படுகின்ற கடும்போக்குடைய பொதுபலசேனாவையும் ராவானா பலய வையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்று.

      ஆனால் அரசினால் இந்த விடயங்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இவர்கள் சரிவர ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவில்லை. மேலும் இவர்கள் புத்தரையே மதிக்கவில்லை. ரவுப் ஹக்கீமையா மதிக்கப் போகிறார்கள்? 

     அடுத்து, அரசு தடுக்க முயன்றால் ஆட்சியை கவிழ்க்க எண்ணுவதோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடவும் எண்ணுவார்கள். ”பௌத்த புமி பிரகடனம்” என்பதே இவர்கள் சிங்கள சமூகம் மீது கொழுத்தும் தீ.  ”பௌத்த புமி பிரகடனம்” என்ற ஜாதிப்போர்வையை போர்த்தியே ஞானசார தேரர் அரசியல் தேரை இழுத்துச்செல்கிறார். 

    எனவே அரசினைக் குற்றம் கூறாதும் அரசிலிருந்து விலகாதும், ஐ.நா.ஆணையாளரிடம் வழங்கிய கடிதத்தில் திருத்தத்தை ஏற்படுத்தி ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். உண்மையில் அதில் குற்றம் சாட்டப்பட வேண்டியது ”கடும் போக்கு சக்திகள் மட்டுமே”

        அமெரிக்கா தற்சமயம் அதிக கரிசனை காட்டுவது மதவெறி குறித்துத்தான். எனவே நாம் பொதுப்பலசேனாவையும் ராவானா பலயவையும் ”சர்வதேச விசாரனை” ஒன்றுக்கு இட்டுச்செல்ல நவநீதம் பிள்ளையிடம் மிகவிரைவாக மன்றாட்டம் நடத்த வேண்டும். அதன் மூலம் பொதுப்பல சேனாவையும் ராவானாவையும்  “சர்வதேச விசாரணைக்கு” இட்டுச்செல்ல வேண்டும். இதுவே இலங்கை அமைதிக்கு தங்க மந்திரம்.

      அத்தோடு கடும்போக்கு மிக்க சக்திகளை விடுதலைப் புலிகளைப் போன்றோ அல்லது தலிபான்களைப் போன்றோ  தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் பிறப்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

2 comments:

  1. yes that's correct .please do it fast

    ReplyDelete
  2. ஹிஹி , சிறுபிள்ளைதனமான ஆலோசனை ,
    நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை , நாடு மிகவும் அமைதியாய் உள்ளது என புகழாரம் பேசிக்கொண்டு , நாட்டில் உருவெடுக்கும் பயங்கரவாதப் போக்குகளை கட்டுபடுத்தாமல் பாராமுகமாய் அரசு உள்ளது என்பதுதான் ஹக்கீமின் பிரேரணை அதில் என்ன தவறு ? .
    உங்கள் வீட்டு நாய் ரோட்டில் வந்து கடித்தால் நாயின் பெயரில் வழக்கு பதிய வேண்டுமோ?
    அதனை நீங்கள்தானே கட்டுபடுத்த வேண்டும் ?

    ReplyDelete

Powered by Blogger.