இறக்கை உடைந்தும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதன் இறக்கை உடைந்து கீழே விழுந்துவிட்டது. எனினும், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானத்தின் இறக்கை உடைந்ததை அறிந்த விமானி, உடனடியாக அட்லாண்டா விமான நிலையத்துக்கு முழுமையாக விவரங்களைக் கூறி, உடனடியாக தரையிறங்க வசதி செய்யுமாறு கூறினார்.
இதையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், அங்கு கூடியிருந்த விமான நிலைய ஊழியர்கள், மீட்புப் பணி அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதனால், அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் உயிர் தப்பினர். இறக்கை விழுந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment