Header Ads



கட்டாரிலிருந்து சுகயீனத்தில் நாடு திரும்பிய எனது மகனை விபத்தில் இழந்து தவிக்கிறேன் - தாய்

(TN) நாரம்மலயில் இடம்பெற்ற வாகன விபத்தில் எனது இரு பிள்ளைகளையும் பறிகொடுத்து வேதனையில் தவிக்கிறேன் என தாய் செய்னுல் மர்லியா (வயது 47) கண்ணீர் மல்கியவாறு மரண விசாரணையில் சாட்சியமளிக்கையில் தெரிவி த்தார்.

நாரம்மல மெட்டியாவத்தையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற பஸ்வண்டி, முச்சக்கரவண்டி என்பன எதிரும் புதிருமாக மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர். இவர்களது மரணம் தொடர்பான மரண விசாரணை நாரம்மல வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பி. இலங்கக்கோன் நடத்தினார்.

இவ்விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே இவ்விபத்தில் உயிரிழந்த மாத்தளை, உக்குவளை வரக்காமுறயைச் சேர்ந்த சகோதரர்களான அப்துல் அkஸ் மொஹமட் பவுசர் சாசீர், அப்துல் அkஸ் மொஹமட் அமீன் ஆகிய இருவரின் மரணம் குறித்து இவர்களின் தாயார் செய்னுல் மர்லியா (வயது 47) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் மேலும் சாட்சியத்தில் தெரிவிக்கையில், இதில் உயிரிழந்துள்ள எனது மகன் சாகீர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டிற்கு தொழிலுக்குச் சென்றார். அவர் தொழிலுக்குச் சென்ற ஸ்தாபனத்தில் தொழில் செய்வதற்கான உடல் நிலை சரியில்லை எனவும் தொழில் புரியமுடியாதென்றும் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில் மகன் சாசீர் ஒருவாரத்திற்கு முன்னர் தொலைபேசியூடாக என்னிடம் கதைத்த போது இதனை தெரிவித்திருந்தார். இதன் பின்னர் சம்பவத்திற்கு முதல்நாள் மீண்டும் மகன் தொலைபேசியில் கதைத்து நாளை அதிகாலை விமானம் மூலம் நாடு திரும்புவதாகவும் அதிகாலையில் என்னை அழைத்துச் செல்ல யாரையாவது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன்படி எனது மூத்த மகன் அமீன் அவருடைய இரு நண்பர்களுடன் அதிகாலை இரண்டு மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றார். அங்கு மகனை அழைத்துக் கொண்டு நால்வரும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது (கண்ணீர் மல்க) இதில் எனது இரு மகன்களையும் பறிகொடுத்து விட்டேன், இது திடீர் விபத்து சம்பவம் இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார்.

மற்றும் உயிரிழந்த அப்துல்வஹாப்தீன் மொஹமட் அலீம்தீன் ஆகியோரின் சகோதரரான மொஹமட் ரஜிமுதீன் (வயது 22) சாட்சியமளிக்கையில், இறந்தவர்கள் எனது சகோதரர்கள் இவர்கள் இறந்தவர்களின் நண்பர்கள் இவர்கள் நண்பனை அழைத்து வரும் வழியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந் துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அம் மரணங்களை பிரதேச பரிசோதனைக் குட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி இச்சடலங்களின் மூளைகளிலும் உடலிலும் பாதிப்பு ஏற்பட்டு அதிக இரத்தம் வெளியேறியதால் இம்மரணம் நிகழ்ந் துள்ளது என அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

நாரம்மல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தினர். மரண விசாரணைஅதிகாரி இவற்றை பதிவு செய்துக் கொண்ட பின் விபத்து மரணம் என தீர்மானித்து சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸாருக்கு அறிவுரை வழங்கினார். 

No comments

Powered by Blogger.