Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் செயற்படும் விதம் பிரச்சினைக்குரியது - இது முஸம்மிலின் கண்டுபிடிப்பு

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை தோற்றுவித்து வடக்கு  கிழக்கை இணைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் அறிவித்திருந்தது.

வட மாகாண சபையில் 38 உறுப்பினர்களுள் மேலதிக 2 ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஈ.பி.டி.பி கட்சிக்கு 2 ஆசனங்கள் கைவசம் உள்ளன.

இதனிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனமே கிடைத்தது.

இருந்தபோதும், அந்த கட்சி சமகாலத்தில் செயற்பட்டு வரும் விதம் பிரச்சினைக்கு உரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்தார்.

கருத்து தெரிவித்த அவர், சிங்கள மக்களுடன் முறுகல் நிலை உள்ளதாக தெரிவித்து பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அந்த கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

2 comments:

  1. இவர்கள் நமது 'தலைவர்கள்' ???? பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக செயற்படும் ஒற்றுமையின் சின்னங்கள்.... ???

    ReplyDelete
  2. தமிழ் மக்களுக்கு ஒரு கருணா,கே.பி,டக்ளஸ் என்றால், முஸ்லிம்களுக்கு ஒரு முசம்மில்,அஸ்வர்,காதர் ...................? இனத் துரோகிகள்

    ReplyDelete

Powered by Blogger.