விஜித தேரரின் அழைப்பை முஸ்லிம்கள் ஏற்க வேண்டுமா..? கூடாதா..??
(முக்கிய குறிப்பு - இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்து முற்றிலும் கட்டுரையாளரின் கருத்தே. இந்த கருத்துக்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்)
(நவாஸ் சௌபி)
ஜப்னா முஸ்லிமில் இன்று 22-03-2014 http://www.jaffnamuslim.com/2014/03/blog-post_8255.html வெளியாகியுள்ள மேற்படி விஜித தேரரின் அழைப்பு தொடர்பாக வாசிக்க கிடைத்தது. அதனோடு குறிப்பிட்ட துண்டுபிரசுரமும் வெளியாகி அதன் பிரதியும் இணைக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பொதுபலசேனா போன்ற பௌத்த சிங்கள இனவாத இயக்கங்களின் அத்துமீறிய அடக்கு முறைச் செயற்பாடுகளுக்கு எதிராக சகல சமையத் தலைவர்களையும் உள்ளடக்கிய வராற்றுத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் மேற்படி விஜித தேரரின் அழைப்பை நாங்கள் வரவேற்கின்றோம். எமது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அவர் எமது முஸ்லிம் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு போராட்ட அழைப்பை விடுத்திருப்பது இந்த நாட்டில் பௌத்தத்த தர்மத்தை நிலைநாட்டும் நல்ல பிக்குகளும் இருக்கும் நம்பிக்கையை எமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது.
ஆனாலும் இன்று நாடு இருக்கும் நிலையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களிலும் தீர்மானப் பிரகடனக் கூட்டங்களிலும் முஸ்லிம்கள் இதுவரை நேரடியாக பங்குகொள்ளாத நிலையிலும் இதனை எந்த முஸ்லிம் அமைப்புக்களும் முன்னெடுக்காத போதும் பொதுபல சேனா அமைப்பினால் தாக்கப்பட்ட விஜித தேரர் இதற்கான ஒரு போராட்ட அழைப்பை விடுத்திருப்பதை சரிகண்டு அதனை ஏற்றுக்கொண்டு அதன் பின்னால் நாங்கள் செல்வதினால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி மிகுந்த சந்தேகங்களும் அச்சங்களும் இருக்கின்றது.
எனவே விஜித தேரர் மேற்படி அழைப்பினை முதலில் நேர்மையான பௌத்த பிக்குகளுக்கும் முஸ்லிம்களோடு சகோதர உணர்வுகளோடு வாழ விரும்பும் சிங்கள மக்களுக்கும் விடுத்திருக்க வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் மதச் சுதந்திரத்தோடு வாழ்வதை உறுதிப்படுத்த சிங்கள சமூகங்களும் பௌத்த பிக்குகளும் குரல் கொடுப்பது சிறந்ததாகும். அதற்கான ஒரு பணியை ஆரம்ப கட்டமாகச் செய்யாமல். இப்போராட்ட அழைப்பில் நேரடியாக முஸ்லிம்களை அழைப்பதில் நாங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இதுவரையும்; முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்து அல்லது எதிர்த்து எமது மக்கள் எந்த ஆர்ப்பாட்டங்;களையும், போராட்டங்களையும் செய்யாதிருக்கின்றார்கள். அதற்கான அவசியமும் எமக்கு இல்லை ஏனெனில் பொதுபல சேனா போன்ற பேரினவாத அமைப்புகள் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் குற்றங்களிலும் விமர்சனங்களிலும்; எந்த உண்மையும் இல்லை. அது முழுமையாகப் பொய்யானதாகும் அவர்களது நோக்கம் எப்படியாவது முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதாகும் இதனை பெரும்பான்மையான சிங்கள மக்களும் அறிவார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கான தீவிரவாத செயல்கைளப் புரிகின்றவர்கள் ஒருசிறு குழுவினரே அவர்களின் பக்கம் பெரும்பான்மையான சிங்களமக்களோ பௌத்த தேரர்களோ இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
எனவே ஒரு சிறுகுழுவினரின்; வேண்டுமென்ற செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் காலிமுகத்திடலில் ஒன்றுதிரண்டால், பௌத்த சிங்கள மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு விட்டார்கள் என்ற கோஷத்துடன் முஸ்லிம்களை விரோதிகளாக்கி குறிப்பிட்ட நிகழ்வை குழப்புவதற்காக அந்த இடத்திலேயே கலவரம் ஏற்பட்டு அதிலிருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்துகளும் அழிவுகளும் ஆரம்பிக்கும் பேராபத்து ஏற்படலாம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் விஜித தேரர் அவர்களால் நிச்சயமாக எங்களை காப்பாற்ற முடியாது. ஒரு பௌத்த தேரர் என்ற கண்ணியத்தை வழங்காமல் விஜித தேரரையே அடித்து தாக்கி இருக்கின்றார்கள் என்றால் அவரால் எப்படி எமது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும்.
எனவே விஜித தேரரின் அழைப்பை ஏற்று ஆவேசமும் சமூகப் பற்றுக்கொண்ட உணர்சிக் கொந்தளிப்புகளுடன் நாங்கள் அவசரப்பட்டு இதற்குப் பின்னால் செல்ல வேண்டிய ஒரு தேவையும் எமக்கு இல்லை. எமது அழிவுகளுக்கு ஒருபோதும் நாங்களே வழிசமைக்க கூடாது.
குறிப்பாக மேற்படி நிகழ்வில் எந்தவொரு முஸ்லிம்களையும் பங்கு கொள்ள வேண்டாம் என்ற பொதுவான அறிவிப்பினை பள்ளிகள் மூலம் அறிவித்து மேற்படி நடவடிக்கையிலிருந்து முஸ்லிம்களை முற்றாக விலகி இருக்குமாறு பணிக்க வேண்டும். முடிந்தவரை ஒவ்வொருவரும் இதற்கான அக்கறையை எடுக்க வேண்டும்.
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரத் தேரர் மியன்மார் சென்றுவந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஊடகங்களின் மூலமாக முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் வம்புக்கிழுத்துக் கொண்டீருக்கிறார். அவரது பேச்சில் நல்ல எண்ணம் இல்லை. இந்த நாட்டில் பௌத்த தீவிரவாத முகத்தை அவரின மூலம் காண முடிகிறது. இந்த தீவிரவாதப் பேச்சுக்கள் முஸ்லிம்கள் மீதான பெரும் அழிவுகளையும் கலவரங்களையும் உண்டுபண்ணுவதற்கான பின்னணியைத்தான் தோற்றுவிக்கிறது. எனவே முஸ்லிம்களே இத்தகைய கொதிப்பான ஒரு காலகட்டத்தில் நாங்கள் ஆவேசமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

உங்கள் கருத்து மிகச் சிறந்த கருத்து. அவ்வாறெனின் இதனைப் பற்றி முஸ்லிம்கள் சிலர் வஜித தேரரிடம் சொன்னால் நல்லதல்லவா!
ReplyDeleteunmayil katturayalarin karuththu mikka nalla karuththu. but ithanai vijitha therarudan kalandalosiththu seyya wendum.illavittal vijitha therar manam punpadum
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மை நவாஸ். சிந்திக்க வேண்டிய தருணமிது.
ReplyDeleteபொறுத்திருப்பதே பொருத்தமானது.
good advice, Muslim should show there power in upcoming election.. not in a way of protest or riots ....
ReplyDeleteAlso this is an good opportunity to show the power of muslims by give there valuable votes to one party like MUSLIM CONGRESS, then only we can get an bargain power with the government..
அடிமைத் தனமான பயந்த சிந்தனை... கோழைத்தனமான சிந்தனை போக்கு..இப்படியான ஒரு அமைதியான எதிர்ப்பை தெரிவிபதட்கு கூட..ஒரு இனத்தை பயந்த நிலைக்கு தள்ளுவதென்பது மிகவும் அபத்தமானது....வானம் இடிந்து விழுந்திடும் எனக் கூறி வெளியில் வரவிடாமல் தடுக்கும் ஒரு செயல் என நாம் கருதுகிறோம். ..!!
ReplyDeleteஇது ஒரு எதேச்சரிகமான இயக்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டமெ ஒழிய சிங்கள மக்களுக்கு எதிரான கூட்டம் அல்ல. இதை நாம் புறக்கணித்தோம் ஆனால், எதிர்காலத்தில் எந்த ஒரு சிங்கள மகனும் நமக்காக எதுவும் பேச முன் வர மாட்டார்கள். எனிவே தயவு செய்து அந்த கூட்டத்துக்கு எல்லா முஸ்லிம்களும் ( அரசியல் தலைவர்களும் உட்டபட ) சமுகமளித்து, பொது பல செனக்களின் இன துவேசமான நடவெடிக்கைகளுக்கு, தங்களுது அமைதியான எதிர்ப்பை தெரிவிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி கொள்கிறோம்.
இந்த அழைப்பு சம்பந்தமாக பௌசி, அஸ்வர், ரவுப் ஹக்கீம் ஆகியோரின் முடிவுகளையும் நாம் வரவேற்கிறோம்...!!
ReplyDeletevijata teraridam kalandu alosittu avarukku inda nilamayai solli puriya vaipatu nallatu
ReplyDeleteporuttu iruppatu poruttamanatu
குருவியின் கருத்தே இங்கு மிக சிறந்தது.இப்போ மட்டுமல்ல,இதே கிட்டதட்ட கட்டுறையொன்று பொதுபல சேனாவின் ஆரம்ப காலத்திலும் வெளிவந்தது,அதாவது துனிச்சலான வாலிபர்களை கோலைகளாக மாற்றியது.களத்தில் நேருக்கு நேர் நின்று வால்வீசி வளர்ந்த இனமே முஸ்லிம் இனம்.மரணத்தை என்றும் நேசிப்பவர்கள்,எதிபார்ப்பவர்கள்,உலகாசை கூடும்போதுதான் மரணத்தை வெறுக்கிறான் மனிதன்.
ReplyDeleteஎங்கே,மியன்மார்போன்று இலங்கையும் வந்துவிடும் என்ற அப்பாவிப்பயம்.முஸ்லிம் தலைவர்களால் செய்யப்படவேண்டிய இப்படியான போராட்டங்களை மாற்று மத சகோதரரே நமக்காக செய்கிறார் என்றால்,நிச்சயம் நமக்கான அவரது கையை பலப்படுத்த வேண்டும்.
பொருமை எனும் பெயரில் நம்மவர் கோழைகளாக வாழத்துடங்கி விட்டார்கள்,காரணம் உலகாசை கூடிவிட்டது.இது நிச்சயம் இஸ்லாத்திற்கான போரட்டம்,அதாவது புனிதப்போர்.மார்க்கம் தாக்கப்படும்போதும்,முஸ்லிம்கள் தாக்கப்படும்போதும் எதிர்தாக்கம் செய்வதுதானே புனிதப்போர்?அதில் வென்றாலும் தோற்றாலும் ஈருலக வெற்றி உண்டு.
இதைவிட ஒரு மிக அவசியமான உண்மையான புனிதப்போர் வந்தாலும்,நிச்சயம்,யாரும் நம்மவர் கலத்தில் குதிக்க மாட்டார்கள்.இது நிச்சயம.
Better not to participate .
ReplyDelete