வாக்களிக்கத் தவறியோருக்கு சந்தர்ப்பம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
மேல் மற்றும் தென் மாகண சபைகளுக்கான தேர்தலில் அஞல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் வாக்களிக்கத் தவறியோருக்கு 20 ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
நாளை 20 ஆம் திகதி வியாழக்கிழமை அலுவலக நேரத்தினுள் குறித்த மாவட்டத்தின் தேர்தல்கள் அலுவலகங்களிலும் கொழும்பு மாவட்டத்திற்காக தேர்தல்கள் செயலகத்திலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இத் தினம் எந்தவொரு விதத்திலும் மேலும் கால நீடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த அஞ்சல் வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகத் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் ஈடுபடுத்தப்படும் உத்தியோகபூர்வ கண்காணிப்பாளர்களுக்கு மேலதிகமாக போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஃ சுயேட்சைக் குழுக்களின் முகவர்கள் மற்றும் அதற்காக அனுமதியளிக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புக்களின் கண்காணிப்பாளர்களை அவர்களது முகவர்களாக கலந்து கொள்ளச் செய்ய முடியும்.
அஞ்சல் வாக்கை அடையாளமிடுவதற்காகத் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளாகத் தேர்தல்கள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை ஒன்றை எடுத்து வருதல் வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
.

Post a Comment