Header Ads



தெஹிவளை முஸ்லிம்களுக்கு நாளை திங்கட்கிழமை நோன்பு பிடிக்குமாறு அழைப்பு

தெஹிவளை முஸ்லிம்கள் மற்றும் அப்பகுதிகளில் இயங்கும் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளினால்  திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக இறை உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நாளை திங்கட்கிழம 3 ஆம் திகதி ஒருநாள் நோன்பு பிடிக்கப்படவுள்ளது.

இதற்கான அழைப்பை தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளனம் விடுத்துள்ளது.

தெஹிவளை முஸ்லிம்கள், தெஹிவளை முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள முஸ்லிம் உறவுகள், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் இந்த நோன்பை நோன்பை முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தெஹிவளை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு நோற்ற முஸ்லிம்களுக்காக இப்தார் நிகழ்வும் நாளை திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. edu dehiwala muslimkalin mattu piraccinai alla aanaya pradeesa musleem kalum noonpu pidittu am orrumayai kaatta weendum

    ReplyDelete
  2. வணக்கவழிபாடுகளை கொண்டு இறைவனை நெருங்க முடியும்தான் ஆனால் இதே சுன்னத்தான நோன்பை பிடிக்கும் உங்களில் எத்தனை பேர் பர்ளான ஐவேளை தொழுகையை நிரேவேற்றுகிறீர்கள் என்பது சந்தேகமே.சரியான மார்க்க அறிவோ,பின்பற்றலோ,மனத்தூய்மையோ,இறை அச்சமோ எம்மிடமில்லாத குறையே எம் பிரச்சினைகளுக்கு காரணங்கள்.

    அனைத்து பிரச்சினைகளுக்கும் தன்னகத்தே தீர்வை வைத்துள்ள குர் ஆனை/இம்மதத்தை வாயளவில்தான் நாம் ஏற்றுள்ளோமே தவிர,அதனை வாழ்வில் ஏற்று நடக்கூடியவர்களாக நாமில்லை,அதாவது இஸ்லாமிய வாழ்வு எம்மிடமில்லை.இதுதான் இன்றைய உலக பிரச்சினகளுக்கும் ஒரே காரணம்.மதத்தை பூரணமாக ஏற்றுக்கொள்ளும் உண்மை விசுவாசிகளுக்கு இந்த உண்மையும் புறியும்.

    நாம் நாமாக இருந்திடின்,இந்த உலகமே நம் காலடியில் கிடக்கும் என்பது சொல்லித்தெறிய வேண்டியதில்லை,தவிர,இதுதான் வரலாறும் கூட.

    முஸ்லிம்களுக்கு/முஸ்லிம் சாம்ராச்சியம் விழத்தொடங்கியதே முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டும் தூரமான வேளையில்தான் என்பதும் வரலாற்றை கற்ற நம் அனைவருக்கும் தெறியும்.

    ReplyDelete

Powered by Blogger.