Header Ads



கண்டி பொல்கொல்லயில் தீ விபத்து - பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது

(JM.HAFEEZ)

கண்டி வத்துகாமம் பிரதான பாதையில் பொல்கொல்ல என்ற இடத்தில் (13.3.2014) இடம் பெற்ற தீ விபத்துகாரணமாக பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

மேற்படி பிரதான பாதையில் பொல்கொல்லை திறந்த பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த இடத்திலுள்ள மூங்கில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி பாரி அல்லேல கல்லோலத்திற்கு உள்ளானது.

பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெறிசல் உள்ள இவ்விடத்திலன் அயலில் பாரிய கட்டிடங்கள் இருப்பதுடன் மின் சாரக் கம்பங்களும், தொலைபேசிக் கம்பங்களும் அவ்விடத்தில் காணப்பட்டன. அவையும் தீயினால் பாதிப்படைந்ததன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டது. அதி உயர் மின் வலுக் கொண்ட கம்பிகளும் அவவிடத்தினூடகச் செல்கின்றன.

பாரிய சிரமத்திற்கு மத்தியில் கண்டி மாநகர சபையின் தீ அணைப்புப் படையினர் வந்து தீயைக் கட்டுப் படுத்தினர். இத் தீ கட்டுப் படுத்தப்படா விட்டால் அயலிலள உள்ள குடி இருபபுக்கள உற்பட வர்த்தக நிறுவனங்களும் பாதிப்படையும் சாத்தியம காணப்படடது.

தீ ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. வத்துகாமம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.