தேர்தல்கள் ஆணையாளரின் மனவேதனை
எவ்வித அதிகாரமும் இல்லாத பதவியையே வகித்து வருவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேர்தல் ஆணையாளருடன் ஒப்பீடு செய்யும் போது தமக்கு உண்டான அதிகாரங்கள் மிகவும் சொற்பளவிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் தமக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோர் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள் விடியோக்கள் என பல்வேறு திடமாக ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் விதி மீறல்களை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பல்வெறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். gtn
.jpg)
மன்னிக்க வேண்டும் தேர்தல் ஆணையாளர் அவர்களே..!
ReplyDeleteஉங்களின் பதவி அதிகாரத்திற்குரிய பலம் உங்களுக்கு இல்லாதிருப்பது குறித்து நான் உங்களை விட அதிகமாகக் கவலைப்படுகின்றேன்.
இந்த நாட்டில் ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக நீங்கள் செலவிடுகின்ற பணம் பல ஏழைக்குடும்பங்களை வாழ வைக்கப் போதுமானது. சட்டவிரோத தேர்தல் சவரொட்டிகளை, கட்அவுட்களை காட்சிப்படுத்தும் கட்சிகளுக்கு எதிராக (வேட்பாளர்களுக்கு எதிராக அல்ல) இந்திய தேர்தல் ஆணையாளர் வழக்குப் பதிவு செய்யவுள்ளார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?
-புவி. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-