Header Ads



எது நடந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது - எச்.எம்.எம்.ஹரீஸ்

(யு.எம்.இஸ்ஹாக்)

ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் அமெரிக்கா தனது சொந்த நலனுக்காகவே இப்படி ஒரு பிரேரணையை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கின்றது. தமிழத் தலைவர்கள் அமெரிக்காவை நம்பியிருந்தனர். ஆனால் அமெரிக்காவோ தமிழ்த் தலைவர்கள் உப்புச்சப்பற்றது என்று கருதக்கூடிய வகையில் ஒரு பிரேரணையைச் சமர்பித்து அவர்களை நட்டாற்றில் விட்டிருக்கின்றது.

 -இவ்வாறு கூறியிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ். பொத்துவில் சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழா சுற்றுலா பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பசுபிக் ஹோட்டலில் 08-03-2014 முற்பகல் இடம்பெற்றது. சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அங்கு உரை நிகழ்த்துகையிலேயே ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு,

 இந்த வருடம் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடைபெறப் போகின்றது. எது நடந்தாலும் இந்த ஆட்சியையோ அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையோ இத்தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்பது வெளிப்படையானது. அமெரிக்காவை நம்பி தமிழ்த் தலைவர்கள் ஏமாந்துவிட்டனர். சிரியாவில் சிறு குழந்தைகளையே எரித்துக்கொல்வதற்கு உதவிவரும் அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு விரலை நீட்டத் தகுதியற்றது; இலங்கையைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ அமெரிக்காவுக்கு அருகதை இல்லை. எனவே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமெரிக்காவிடம் பேசுவதை விடுத்து, நாட்டுக்குள்ளேயே, நாட்டுத் தலைவருடனேயே பேச வேண்டும் என்ற யதார்த்தத்தை தமிழ்த் தலைவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு எடுபட்டுப்போய் தமிழ்மக்களையும் நட்டாற்றில் விடுவதற்கு தமிழ்த் தலைவர்கள் இசையக்கூடாது - என்றார் ஹரீஸ் எம்.பி. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் மூவினங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இதன்போது பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் 1000 பெண்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், 600 தென்னங் கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. 

3 comments:

  1. இந்த நாட்டுக்கு மகிந்தவின் ஆட்சி வேண்டுமா???...வேண்டாமா??? சிறுபான்மை மக்களுக்கு நன்மை பயக்குமா??? தீமை பயக்குமா??? என்பதை கூறுமாறு தான் மக்கள் கேட்கிறார்கள்... உம்மிடம் ஆருரம் கூறுமாறு கேட்கவும் இல்லை அது தேவையும் இல்லை.

    தன்மானம், சூடு, சொரணை, உள்ளவர்கள் இப்படி யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று கணக்கு போடமாட்டார்கள்... இந்த உணர்வுகள் அற்ற.. நக்கு உண்பவர்கள் தான் இப்படி கணக்கு போடுவார்கள்..!!!

    நீங்கள் எப்படியானவராக இருக்க விரும்புகிறீர்கள் சகோதரரே....??????

    ReplyDelete
  2. மிக சொகுசான வாழ்க்கை அவரால் உங்களுக்கெல்லாம் இருக்கும் வரைக்கும்,அவரை தோற்கடிக்க முடியாதுதான்.முதலில் உங்களைப்போன்றவர்களை தோற்கடித்தால் எல்லாமே கட்சிதமாய் அமைந்துவிடும்.

    சமூக சிந்தனையற்ற ஜென்மங்கள் இவர்கள்தான்.வயிறு பத்துமளவுக்கு இவருடைய சமூகத்திலும் பல பிரச்சினகள் நடந்திருந்தும் ஒன்றுமே நடக்காதவைபோல் இன்னுமின்னும் மாமாவுக்கு ஆதாரவு நல்கியே இவர்களது போலப்பு செல்கிறது கவலையே.

    ReplyDelete
  3. kuruvi...

    ரொம்ப நாளைக்கப்புறம் வந்தாலும் பின்னிட்டீங்க போங்க. ஆனாலும் பத்தல்ல போல இருக்கு.. இன்னும் ஏதாவது சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.