Header Ads



றிசாத் பதியூதினுக்கு ஞானசார தேரரின் விளக்கம்..!


வில்பத்து பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பினர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் முகமாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுபலசேனா போன்ற சில அமைப்புகள் தற்போது சிறுபான்மையினருக்கு எதிரான பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.

வில்பத்து பகுதியில் 5 ஆயிரம் குடும்பங்களை நான் குடியேற்றியதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதற்கான தேவைப்பாடு எனக்கில்லை. அந்த மக்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல, கடந்த யுத்தகாலத்தில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாவர். எனவே, யுத்தம் நிறைவடைந்த பின்னர் காடுகளை சுத்திகரித்து தமது இருப்பிடங்களுக்கு சென்றுள்ளனர்.

எனவே, அதற்கு எதிராகவும் பொதுபலசேனா செயற்படுகின்றமையானது காரணமற்ற செயலாகும் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தவிடயம் தொடர்பாக sfm  பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வினவியது.

வணிகத்துறை அமைச்சர் என்றவகையில் அவருக்கு நாங்கள் கடமையை பற்றி உணர்த்த விரும்புகிறோம். வில்பத்து மற்றும் சிலாவற்றுறை வீதியில் இருமறுங்கிலும் முஸ்லிம் மக்கள் மாத்திரமே குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் குடிசன பரம்பலுக்கு அமைய அங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரையும் குடியமர்த்தவேண்டும். அன்றி ஒரு இனத்தவரை மாத்திரம் குடியமர்த்துவதை விடுத்து அனைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சிங்கள மக்களும் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டார்கள். இது முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருத்து அல்ல. எனவே, பிரச்சினையை மாத்திரமே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. காக்கிச்சட்டை போடாத போலிசு என்று பொதுபல சேனாவை சேனாக்களே சொன்னார்கள்.ஆனால்,தேர்தலில் இறங்காத ஜனாதிபதி என்றாலும் இவர்களையே சாறும்.நாட்டின் ஜனாதிபதி என்று பொம்மையாக ஒருவர் இருக்க,நாட்டின் பல விடயங்களின் தலையீடுகளும் இவர்களின் வார்த்தைகளிளேயே தங்கியுள்ளது.

    இந்த பொதுபல சேனாவைப்போன்று,சிறுபாண்மை மக்களில் ஒருவன் இப்படி கருத்துக்களை கூறினால் சும்மா விடுவார்களா?இல்லவே இல்லை.அநீதியான பாரபட்சமான ஆட்சி இது.

    மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இருவரை கைது செய்து 48 மணிகள் விசாரனை என்ற தோரனையில் காவலில் வைத்திருந்து இப்போதுதான் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் இரு சிறுபாண்மை மக்கள்,காரணம் கேட்டால், புலிகளுடன் தொடெர்பு என்று சொல்லுகிறார்கள்.வருடாவருடம் யுத்த வெற்றி மில்லியன் கணக்கில் செலவிட்டு கொண்டாடப்படுகிறது,இன்னுமா புலிகள் இருக்கிறார்கள்? இதேபோல்,பொதுபலசேனாக்களை இந்த பானியில் விசாரனை நடத்துவார்களா?அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மிகதெளிவான காரணம் இவர்களின் கைதுக்கு விசார்னைக்கு இருந்துமா செய்யமாட்டார்கள்?

    ReplyDelete
  2. Mr. Rishad Badiuddin, Your service to the community highly appreciated, but responding to unofficial movement such as BBS and Ravaya it is not advisable since you are respected Minister and they are communal extremist. Please ignore these groups if we continue to respond to them Government will keep the silence and get their work done through them.

    ReplyDelete

Powered by Blogger.