Header Ads



காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் 26 நாடுகள்..!


கடந்த 9 நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், பாரிய பரப்பளவைக் கொண்ட இரண்டு புதிய பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

காணாமல் போவதற்கு முன்னதாக இறுதியாக விமானம் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து வடக்கு அல்லது தெற்கு பிரதேசத்தை நோக்கி சென்றிருக்கலாம் மலேஷிய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

239 பேருடன் காணாமல் போன இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 26 நாடுகள் மலேஷியாவிற்கு உதவி வருகின்றன.

No comments

Powered by Blogger.