கிழக்கு மாகாண பொறியியலாளர்களின் இடமாற்றத்தை 06 மாத காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதி
கிழக்கு மாகாண பொறியியலாளர்களின் இடமாற்றத்தை 06 மாத காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியினை வழங்கியது. என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. சில தொடர் வேலைகளும் உள்ளதுடன் நிறைவு செய்யப்பட்ட வேலைத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கப்பட வேண்டியுள்ளதால் 06 மாத காலத்திற்கு கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் 06 பேரினது இடமாற்றத்தை பிற்;போடுவதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை கிழக்கு மாகாண பொறியியலாளர்கள் 06 பேரின் இடமாற்றத்தை 06 மாத காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியினை வழங்கியது.
மேலும் அவர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது இத் தீர் மானங்கள் மேற் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்
.jpg)
Post a Comment