Header Ads



பாடுவதை நிறுத்தாததால் பாகிஸ்தான் பாடகர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பாடகர் ஒருவரை ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானின் பிரபலமான நகரம் பெஷாவர். இங்கு பஷ்டு மொழி பாடகர் வாசிர் கான் அப்ரிடி என்பவர் பிரபலமாக விளங்கினார். 

கைபர் ஏஜென்சி சார்பில் இவர் பல இடங்களில் பாடல்கள் பாடி வந்தார். இவர் பாடுவதை நிறுத்த வேண்டும் என்று ஆயுததாரிகள்   கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். 

அதை பொருட்படுத்தாத வாசிர் கான், தொடர்ந்து பாடி வந்தார். அதனால் 3 முறை இவரை ஆயுததாரிகள் கடத்தினர். பின்னர், மீண்டும் பாட கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவரை ஆயுததாரிகள் விடுவித்தனர்.

இந்நிலையில், பெஷா வர் புறநகர் பகுதியான பக்கிர் கிலே என்ற இடத்தில் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள், பாடகர் வாசிகர் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். 

1 comment:

  1. என்று தான் திருந்தப்போகிறார்களோ தெரியவில்லை எனது பாக்கிஸ்தான் நன்பன் கூறுவார் இறைவனால் சபிக்கப்பட்டதேசம் என்றும் கூறுவார் அதற்கு நான் எனது நாட்டு நிலவரத்தை கூறியபொழுது அவர் சொன்னார் ஒரேமதத்தவர் ஒருவரை ஒருவர் கொல்லுவது கொடுமை என்பார்

    ReplyDelete

Powered by Blogger.