Header Ads



காதலர் தினத்துக்கு எதிர்ப்பு - நாய்க்கும், வெள்ளாட்டுக்கும் திருமணம் நடத்தி போராட்டம்


India - காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி அருகே நாய்க்கும் வெள்ளாட்டுக்கும் திருமணம் செய்து வைத்து இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கோபி அருகே இந்து முன்னணியினர் இன்று காலை நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரியில் இருந்து மணமகன் போல் நாயையும், மணமகள் போல் வெள்ளாட்டையும் அலங்கரித்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். கொடிவேரி அணை மேல் பகுதியில் உள்ள அக்கரை முனியப்பன் கோயில் முன்பு புரோகிதர் போல் வேடமிட்ட ஒருவர் மந்திரம் ஓத, மாலை மாற்றி நாய்க்கும், வெள்ளாட்டுக்கும் திருமணம் செய்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.