Header Ads



ஹாதி நீபதிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கீழ் குறிப்பிடப்படும் இடங்களுக்கான ஹாதி நீபதிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தலில் கோரப்பட்டுள்ளன.

எனவே தகுதியானவர்கள் தமது விண்ணப்பத்தினை கொழும்பு நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு எதிர் வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

வெற்றிடங்கள் உள்ள பகுதிகள்

நிந்தவூர், மொனறாகலை, அம்பாந்தோட்டை, ஏறாவூர், பொலன்னறுவை, அட்டாளைச் சேனை, நாவலப்பிட்டி, மூதூர், அக்குறுனை, புத்தளம்-சிலாபம், கொழும்பு வடக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு தெற்கு ஆகிய இடங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பவர்கள் பெப்ரவரி 7ஆம் திகதி வர்த்தமாணிப் பத்திரிகைகளில் சகல விளக்கங்களும் வழங்க்கபட்டுள்ளமையினால் அதனை பார்த்து விண்ணப்பிக்கலாம்.

3 comments:

  1. What are the basic qualifications for Khadi......?.

    ReplyDelete
  2. இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் கவணத்திற்கு:

    இது முற்றிலும் அல்-குர்-ஆன்,சுன்னாவை கொண்டு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் புனிதமான செயல்.தற்காலத்தில் பெரும்பாலும் அதிக இடங்களில் இறைவனை மறந்தவர்களும்,இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களுமே இந்த பதவிக்கு வருவதால்,இலஞ்சம்,பொய்,பக்க சார்பு இப்படியான மிகவும் கொடூரமான பாவங்களை கொண்டவர்களாக எம் காழி நீதிபதிகள் உள்ளார்கள்.மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்களே அற்ப இலாபத்திற்காக இறைவனின் வசணங்களை விற்கிறார்கள்.இறைவனின் வசனங்களை விற்க வேண்டாம் எனவும் குரான் சொல்லுகிறது.

    நீதிபதிக்கெல்லாம் நீதிபத்யான இறைவனுக்கே அனீதி இழைக்கும் எம்மவர்,இறைவனின் பயந்து கொள்ளட்டும்.உங்களால் இந்த பதவியில் தக்வா,இஹ்லாஸுடன் செயற்பட முடியாது என்றால்,நிச்சயம் இதற்கு போகாமல்,தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

    இறைவனின் பிரதினிதியே மனிதன்.அவன் இறைவனின் கட்டளைகளை பூமியில் செயற்படுத்துவான் என்ற கருத்தில் வேதம் சொல்லுகிறது.

    மனம் வேதனைப்படும் அளவுக்கு கடந்த காலங்களில் இஸ்லாமிய துரோகிகளால் இந்த பதவி ஆட்சிசெய்யப்பட்டுள்ளது.

    இன்ஷா அல்லாஹ்.காலம் சரியாக வந்தால்,இப்படியான துரோகிகளுக்கு இஸ்லாமிய சட்டமே பதிலளிக்கும்,அது மிக விரைவில் வர வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

    நன்றி.

    ReplyDelete
  3. Mr.Sajahan, when I read your comm I felt that all the Qadi Judges come under your
    statement. But as far as I am concern about 99 % Qadis are doing well only one %
    is as you mentioned. So kindly do not blame all the Qadis and do not patray our
    community as they are doing good job.
    Thanks.

    ReplyDelete

Powered by Blogger.