Header Ads



வர்ணஜால வாணவேடிக்கையுடன் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கியது

ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்று முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய பழமையான கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்-சில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது.

ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிவந்த இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி மாஸ்கோவில் தொடங்கி வைத்தார்.

ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8.14-க்கு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, துவக்கவிழாவுக்கான நேரத்தை அறிவிக்கும் வகையில் ரஷ்யாவின் முக்கியமான நகரங்களில் இரவு 8.14 என்ற இலக்கை நிர்ணயித்து ’கவுண்ட் டவுன்’  முறையில் ஏராளமான ராட்சத கடிகாரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

கவுண்ட் டவுன் முடிந்ததும் சரியாக 8.14-க்கு ஒலிம்பிக் அரங்கில் லேசர் ஒளிக்கற்றைகளின் மூலம் நடத்திய கண்ணைக் கவரும் வண்ணமயமான வாணவேடிக்கைகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. 

ரஷ்யாவின் பல நகரங்களை சுற்றி வந்த ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டவுடன் போட்டி தொடங்கி விட்டதை குறிக்கும் வகையில் வானத்தில் ஏவப்பட்ட 5 வளையங்கள் கொண்ட லேசர் ஒளிக்கற்றை ‘லோகோ’-வில் ஒரு வளையம் சரியாக திறக்காததால் பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ரஷ்ய சிறுமி ஆடிய ஒய்யார நடனம் அனைவரையும் மெய்சிலிர்ப்பில் ஆழ்த்தியது.

பின்னர்,போட்டியில் பங்கேற்ற நாடுகளை சேர்ந்த வீர்ர்-வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தியபடி மிடுக்காக அணிவகுத்து சென்றனர்.

சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு போட்டிகள் 23-ம் தேதி வரை தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறுகிறது. 98 பதக்கங்களை வெல்ல 2900 வீரர்-வீராங்கணைகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.