நீரில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்றிய சகோதரர் வபாத்..!
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கெலிஓயா கலுகமுவையில் மஹாவலி கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை 25.02.2014 நீரில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்றச் சென்ற அவரின் சகோதரர் பரிதாபகரமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாதகமை தல்கஸ்பிடியவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான எம்.ஆர்.எம். சரூஜ் (33 வயது) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் விடுமுறையில் நாடு திரும்பி சில நாட்களிலேயே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கெலிஓயா கலுகமுவையில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்த போது தனது தம்பி மற்றும் மனைவியின் சகோதரர் உட்பட குழந்தைகளுடன் மஹாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது சகோதரர் நீரில் மூழ்குவதைக் கண்ட இவர் அவரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த போது நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவரின் சகோதரர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பான விசாரனைகளை பேராதனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஅல்லாஹ் அவரின் பாவஹ்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தில் அவரைக் குடியிருத்துவானாக. அவருக்கு அருள் புரிவானாக. அவரின் குடும்பத்தினருக்கு பொறுமையைக் கொடுப்பானாக. அல்லாஹ் நாடியவர்களை நாடிய நேரத்தில் மரணச் செய்கின்றான்.
Aameen
Delete