Header Ads



அமெரிக்கர்களின அறிவு இவ்வளவுதான்..!


சூரியனை பூமி சுற்றுகிறது என்பது அமெரிக்காவில் சுமார் 26 வீதமானோருக்கு தெரியாது என்பது ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் 2,200 க்கும் அதிகமானோரை வைத்து தேசிய விஞ்ஞான ஸ்தாபனம் மேற்கொண்ட கணக்கெடுப்பு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது இதில் உயிரியல் மற்றும் பெளதீகவியல் தொடர்பில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 6.5 வீதமானோர்கள் அனைத்து கேள்விகளுக்கும் தவறாகவே பதிலளித்துள்ளனர்.

இதில் சாதாரண இயற்கை உண்மைகள் குறித்து 70 வீதமானவர்கள் மாத்திரமே பதிலளித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு சிக்காக்கோவில் நடந்த அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சம்மேளனத்தின் கூட்டத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

இதில் சூரியனை பூமி சுற்றுகிறதா அல்லது சூரியன் பூமியை சுற்றுகிறதா என்ற கேள்விக்கு சுமார் 26 வீதமானவர்கள் தவறாகவே பதிலளித்ததாக கணக்கெடுப்பு கூறுகிறது. தவிர பெரு வெடிப்பின் மூலமே பிரபஞ்சம் தோன்றியது என்ற கேள்விக்கு 39 வீதமானவர்கள் மாத்திரமே சரியாக பதிலளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.