Header Ads



அமைச்சர் றிசாத் பதியுதீனும், வடமாகாண முஸ்லிம்களும்


(முசலி முகைமின்)

வடமாகாணம் எனும்போது அங்கு யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளன.இவற்றில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களும் தேர்தல் முறைப்படி வன்னித் தேர்தல் தொகுதி எனப்படுகிறது.

இப்பிரதேச அரசியல் வரலாற்றைப்பார்க்கும் போது .திரு.றஹீம் ( பா.உ),திரு .ஐயூப்( பா.உ).எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் (பிரதி அமைச்சர்)ஐ.எல்.இல்யால் (பா.உ),நூர்தீன் மசூர்( பிரதி அமைச்சர) றிசாத் பதியுதீன் (அமைச்சர்),ஹூனைஸ் பாரூக் (பா.உ),முத்தலிபாவா பாருக் (பா.உ) போன்றோர் முக்கிய இடத்தைப்பெறுகின்றனர்.

வடமாகாணத்தில் இருந்து பலவந்தமாக முஸ்லிம்கள்வெளியேற்றப்பட்டபோது ,அதனைத்தடுக்கவோ. அல்லது வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிபுரியவோ ஐக்கியதேசியக்கட்சி  அரசால் முடியாமல் போனது.அப்போது அவர்கள் செய்த பணிகளைத் திரும்பிப்பார்த்தால் நிலைமை நன்கு புரியும்.

அரசியல் மாற்றம் ஏற்பட்ட பிறகு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.எம்.எச்.எம்;.அஸ்ரப் அவர்களால் இம்மக்களுக்கு பெரும் சேவைகள் செய்யப்பட்டன.உ-ம் மீள்குடியேற்றக்; கிராமங்கள்,நட்டஈடுகள்,திருமணக்கொடுப்பனவுகள்.30 பாடசாலைக் கட்டிடங்கள்,புதிய பாடசாலைகள்,இப்படிச்சொல்லிக் கொண்டே போகலாம்.

நூர்தீன் மசூர்,எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் போன்றோரும் பிரதியமைச்சர்களாக இருந்து எமது மக்களுக்காக தமது அமைச்சுக்கள் மூலம் வழங்கிய சேவைகளையும்,அவற்றின் கனதியையும் நாம் அறிவோம்.வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிரதியமைச்சர் பதவி ஒன்று வழங்குவதுதான் சரித்திரமாக இருந்தது.இந்தச் சரித்திரத்தை மாற்றி வடக்கு மண்ணின் மைந்தனால் அமைச்சர் பொறுப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய புகழ் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களையே சாரும்.

தாராபுரத்தை பிறப்பிடமாகக்கொண்ட இவர்,ஒரு பொறியியலாளர்.அன்று இளைஞனாக இருந்த அவர் எமது சமூகத்திற்கு நல்லதைச் செய்யவேண்டும்.என்ற நல் நோக்கோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.இந்த அறவழிப்பயணத்தில் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துகொண்டு வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களுக்கு அரசியல்ப்பணி புரிய வேண்டுமென விரும்பினார்.போராடினார் ஆனால்,அதற்காக அங்கு எவ்விதப் பிரதிபலிப்பும் வெளிவரவில்லை.

ஆகவே,வடபுல முஸ்லிம்களின் நலனிற்காக  இவர் முஸ்லிம் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.இதன் பின்னர் மஹிந்த அரசால் றிசாத் பதியுதீன் அவர்கட்கு புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்பட்டது.இவ்வமைச்சினூடாக தன்னால் செய்ய முடிந்த அனைத்துப்பணிகளையும் ஷபால் நினைந்தூட்டும் தாய்போல| செய்துவந்தார்.இவர் வடமாகாண முஸ்லிம் மக்களையும்,தமிழ் மக்களையும் தன் இருவிழிகளாகவே போற்றுகிறார்.இவரிடம் இனவாதமோ,மதவாதமோ.பிரதேச வாதமோ இருப்பதில்லை.இவரை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாகவும்,தொலைபேசி ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.இது ஏனைய அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகும்.

இவரின் மனதில் ஒரு கனவு இருந்தது. அதாவது நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கும் காலத்திற்குள் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும்,முஸ்லிம் மக்களையும் மீள்குடியேற்றி முடிக்கவேண்டும் என்பது|ஆனால் அப்போதய கள நிலைமைகளால் முஸ்லிம் மக்களை குடியேற்ற முடியாமல் போனது.வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்த 3000 00 மக்களும் குடியேற்றப்பட்டனர். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குறிப்பிட்ட முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற முடிந்தது.

இராணுவத்தால்  வடபுலம் மீட்க்கப்பட்டது.பின்னர் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தால் மீள்குடியேற்ற அமைச்சு வேறு ஒருவரின் கைக்கு மாறியது.றிசாத் பதியுதீனுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு வழங்கப்பட்டது.எந்த அமைச்சைக் கொடுத்தாலும் அதனைச் சிறப்பாகச்செய்யும் ஆற்றல் இவரிடமுண்டு.

றிசாத் பதியுதீன் அவர்கள், நாடு முழுதும் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு எவராவது ஒரு அநீதி செய்தால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பவர் இவரே ஆவார்.இதனால் அவர் ஒரு தேசியத்தலைவராக உயர்ந்து உள்ளார். சேர்.ராசிக் பரித்,டீ.பி.ஜாயா, சித்திலெப்பை,அராபிபாஷா,பதியுதீன் முகம்மட்,எம்.எச்.எம்.அஸ்ரப், றிசாத் பதியுதீன்.

றிசாத் பதியுதீன் அவர்களிடம் மக்கள் பலமுண்டு. ஜனாதிபதியின் ஆதரவு உண்டு. ஏனைய அமைச்சர்களின் ஆதரவும் உண்டு. மூவின மக்களாலும் நேசிக்கப்படுபவர் .நமக்கென தனியான அரசியல் கட்சியை (அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ்) ;உருவாக்கியவர்.இக்கட்சி சார்பிலே இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும்,பல மாகாணசபை உறுப்பினர்களையும்,பல பிரதேச சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளார்.இப்படி இவரின் பலத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.உலகில் உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம்களில் இருந்து பலமான 500 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார.

இப்படிப்பட்ட அமைச்சரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடைபோடுவதற்காக ஒரு திட்டமிட்ட குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.அவர்களின் நடவடிக்கைகளாவன,

* கோந்தைப்பிட்டி இறங்குதுறைப் பிரச்சினை
* சன்னார் காணிப்பிரச்சினை
* அப்பா கபுரடி காணிப்பிரச்சினை
* தலைமன்னார் காணிப்பிரச்சினை
* மன்னார் நீதிமன்றப்பிரச்சினை
* இந்தியன் வீட்டுப்பிரச்சினை
* பூவரசன்குள காணிப்pரச்சினை
* அரச தொழில் பிரச்சினை

         வடமாகாணசபைத் தேர்தலின் பிற்பாடு அமைச்சருக்கு எதிரான சதிவலைகள் வேகமாகப் பின்னபடுவதைக் காணமுடிகிறது.ஆகவே இவற்றை சரியாக இனம் கண்டுகொண்டு வடபுல முஸ்லிம் மக்கள் இவரின் கரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.எமக்கு உதவவே இறைவன் ஒரு செயல்வீரனை தந்துள்ளான்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலாகட்டும்,பாராளுமன்றத்தேர்தலாகட்டும் எமக்காக களத்தில் இவரையும், ஜனாதிபதியையும் ஆதரிக்கவேண்டும்.

அமைச்சரின் சேவைகளில் சில:

* கனவாக இருந்த அமைச்சுச் செயலாளர் பதவிகள், திணைக்களத் தலைவர் பதவிகள்,ஆணையாளர் பதவிகள் ,இணைப்பாளர் பதவிகள் வழங்கியமை., வன்னி மீலாத் விழா, மாதிரிக்கிராமங்கள் அமைப்பு, சன சமூக கட்டட நிர்மாணம், முன்பள்ளி மேன்பாடு, 500 ஆசிரியர்கள் நியமனம், முகாம் அதிகாரிகள் நியமனம், உலக வங்கி உதவியுடன் 325 ஆயிரம் செலவில் கல்வீடுகள்
புதிய பாடசாலைகள்
ஏனைய பாடசாலை கட்டிடங்கள்
வடமாகாண ஆணையாளர் அலுவகம் திறப்பு
அமைச்சின் உப அலுவகங்கள்(முசலி,மாந்தை)
மீள் குடியேற்றச் செயற்பாடு
மன்னார் ,முருங்கன,;சிலாபத்துறை வீதி புணரமைப்பு 
தொழில் பயிற்சிகள்
தையல் பயிற்சி நிலையங்கள்
தையல் இயந்திர விநியோகம்
திருமணக் கொடுப்பனவுகள் 
மீள் குடியேற்ற உத்தியோகத்தர் நியமனம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்
சுய தொழில் ஊக்குவிப்புக்கள் 
தமிழ்,முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்பியமை
எம்மக்கள் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியமை
புத்தளம் முஸ்லிம்களுக்கும், வடபுல முஸ்லிம்களுக்கும் சம சேவை செய்கின்றமை
உலர் உணவு தடைகளை நீக்கியமை 
வன்னிப்பிரதேச ஒவ்வொரு தமிழ் முஸ்லிம் கிராமங்களில் அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக செய்படுகினறமை.
புதிய பள்ளி வாயல்கள் ,மத்ரஸாக்கள் அமைப்பு 
அரசுக்கும் எம்மக்களுக்கும் நெருங்கிய உறவினை ஏற்படுத்தியமை
முசலி மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தியமை 
மின்வினியோகம் செயற்படுத்தியமை
புத்தளம்,மன்னார் வீதி திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை
வன்னி தமிழ் அகதிகளுக்கு மீள்குடியேற்ற உதவி செய்தமை
குளம்,கால்வாய்கள் புனரமைப்பு
மீள்குடியேற்ற உத்தியோகத்தர் நியமனம்
கிராம எழுச்சித்திட்டங்கள்
சமுர்த்தி நியமனம் பெற்றுக்கொடுத்தமை
அரசகாணிகள் பெற்றுக்கொடுத்தமை
அரபு நாடுகளின் உதவியுடன் வீடமைப்புத்திட்டங்கள்
முகாம் அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுத்தமை

          சீனப்பழமொழி ஒன்று உண்டு.பசியோடு இருப்பவனுக்கு மீனைக்கொடுப்பதைவிட மீன்பிடிக்கும் முறையைக் கற்றுக் கொடுப்பது சிறந்தது.இவ்வடிப்படையிலேயே அரச தொழில்கள் வழங்கப்படுகி;ன்றன.

No comments

Powered by Blogger.