Header Ads



அக்கரைப்பற்று பாயிஷா மாகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி


(ஏ.எல்.ஜனூவர்)

அக்கரைப்பற்று பாயிஷா மாகாவித்தியாலயத்தின் 2014ம்' ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஏ. இஸ்ஸடீன் தலைமையில்  அதாஉல்லா மைதானத்தில் இன்று 25-02-2014 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதலாவது போட்டியாக 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம் பெற்றது. இப்போட்டியில் மூன்று இல்லங்களுக்கும் பலத்தபோட்டி இடம் பெற்று இறுதிப்போட்டிக்குஅரபாமற்றும் சபாஆகிய இல்லங்கள் தெரிவுசெய்யப்பட்டன.

இறுதிப் போட்டியில் நாணயசுழற்ச்சியில் வெற்றிகொண்டசபாஎதிர்' அணியைதுடுப்பெடுத்தாடவிதித்தது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்களில் 116 என்றபாரியஓட்டத்தினைஎதிர் அணிக்குசவாலாகஅரபாவிதித்தது. பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய சபா 9.2 ஓவர்களில் 118 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அக்கரைப்பற்று பாயிஷா மாகாவித்தியாலயத்தின் 2014ம்' ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் அடுத்த போட்டியாக காற்பந்துநாளை நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்களும்,மாணவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டனர்.

மற்றும் அக்கரைப்பற்றுபாயிஷா மாகாவித்தியாலயத்தின் 2014ம்' ஆண்டுக்கான இல்லவிளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் போட்டியாகஎ திர்வரும் 2014.03.07ம்  திகதிமிகவும் விமர்சையாக அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டுமைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

No comments

Powered by Blogger.