Header Ads



அசாத் சாலி கின்னஸ் சாதனை படைக்கும் வாய்ப்பு - தினகரன் பத்திரிகை கூறுகிறது

(16-02-2014 அன்று வெளியாகியுள்ள தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் 'காதோடு, காதாக' என்ற பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து)

அரசியலில் இப்படியொரு பாய்ச்சலை எவராலும் பாய்ந்து சாதனை நிலைநாட்ட முடியாது. கின்னஸ் சாதனைப் பதிவிற்கு விண்ணப்பித்தாலும் உலக சாதனையாக பதிய வாய்ப்பு உள்ளது. அந்தளவிற்கு அசாத் சாலி ஐயாவின் கட்சி விட்டுக் கட்சி தாவும் பாய்ச்சல் அமைந்துள்ளது. 

புகழும் கட்சிகளைத் துவம்சம் செய்வதில் இவரை வெல்ல எவராலும் முடியாதுதான். ஐக்கிய தேசியக் கட்சியில் ஆரம்பித்த அரசியல் ஊர் சுற்றி உலகம் சுற்றி இருந்த இருப்பிற்கே வந்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் அது இப்போது மீண்டும் ஒரு தடவை ஊர், உலகம் சுற்றப் புறப்பட்டுவிட்டதாம்.

No comments

Powered by Blogger.