Header Ads



”மின்சார கதிரை கதை” வாக்குகளைப் பெறுவதற்காக கூறப்படும் பொய் – சந்திரிக்கா

(Nf) ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபகர் விஜய குமாரதுங்கவின் 26 ஆவது நினைவு தினம் இன்று 16-02-2016 அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு சீதுவையில் நினைவு நிகழ்வு ஒன்றும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீதுவையில் விஜய குமாரதுங்கவின் உருவச்சிலைக்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது 26ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க குமாரதுங்க. விஜய குமாரதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, சர்வதேச அழுத்தத்தின் ஊடாக மின்சார கதிரையில் அமர்த்துவதற்கான முயற்சி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

சர்வதேசம் தொடர்பில் தனக்கு நன்றாக தெரியும் எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா, சர்வதேசத்துடன் மிக பெரிய தொடர்பும் தனக்குண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுத் தொடர்பில் நான் எந்த விடயமும் இதுவரை அறியவில்லை. அது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கூறப்படும் பொய்யாகும். சர்வதேசத்தில் இடம்பெறும் விடயங்கள் குறித்து எமக்கு நன்றாக தெரியும். அவ்வாறு ஒன்றும் இல்லை.

1 comment:

  1. அவரைப்பற்றி அவரது பதவியிலிருந்த உங்களுக்குதான் நன்கு தெறியும் மேடம்.இன்னும் என்னென்ன வெளிவருமோ தெறியல்ல.உங்களை இறைவன் ஆசிர்வதிப்பானாக.நீண்ட ஆயுளும் நல்ல திடகாத்திரத்தையும் உங்களுக்கு வழங்கி,அதனை கொண்டு அப்பாவி இலங்கை வாழ் மக்களுக்கு மேலும் உங்களது சேவை கிடைக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.