Header Ads



'வியத்தகு தேசத்திற்காக, தங்கக் கரங்களுக்கு பாதுகாப்பு'


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

 'வியத்தகு தேசத்திற்காக தங்கக் கரங்களுக்கு பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் இலங்கை ஆசியாவின் வியத்தகு விந்தையை நோக்கிச் செல்லும் பயணத்தில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், இலங்கை நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கிவரும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் 725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியத்தை வழங்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப விழா, நேற்று (24) திங்கட்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயம் மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விஷேட கருத்திட்ட அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், அரசாங்க அதிபர் சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உள்ளிட்ட அதிதிகளினால் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மதங்களைச் சேர்ந்த  725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியம், உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் விநாயகமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கமக்காரப் பெருமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சில பிரச்சினைகள் காணப்பட்டு, அவை சில காலங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்து. அவற்றினை சீர்செய்து ரூபா 1,000 முதல் ரூபா 5,000 வரையில் கமக்காரப் பெருமக்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.