Header Ads



அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டி

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக 2014 ஆம் ஆண்டிற்கான  இல்ல விளையாட்டுப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

கமர், சமா மற்றும் ஸம்ஸ் ஆகிய இல்லங்களுக்கிடையே தற்போது குழு நிலைப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நேற்று 18.02.2013) கரப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றதுடன்,இன்று உதைப்பந்தாட்டப் போட்டியும், நாளை கிரிக்கட் போட்டியும் நடைபெறவிருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து மெய்வல்லுனர்ப் போட்டியும் இடம்பெறவுள்ளதுடன்,  எதிர்வரும் 2014.03.03ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேனவும், விசேட அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் அவர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

பாடசாலை வரலாற்றில் இவ்வாறான இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

பாடசாலை அதிபர் இத்ரீஸ் அவர்களினதும், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினதும் பெரும் முயற்சியின் காரணமாகவே இவ்விளையாட்டுப்போட்டி நடாத்தப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.