Header Ads



சமாதான நீதிவான்கள் நூல் வெளியீடும், கௌரவிப்பும்

(றாசீக் நபாயிஸ்)

மருதமுனையின் கலை, கலாச்சார, பாரம்பரிய, கல்வி, பொருளாதார, சமகால நிகழ்வுகளை தாங்கி வரும் அல்-மருதமுனையின் ஆசிரியர் எம்.சி.எம்.முகம்மது அப்துல் காதிர் JP அவர்களின் பெரும் முயற்சியால் மருதமுனையின் வசித்து வரும், மரணித்த JP மார்கள் அடங்கிய தகவல்களைக் கொண்ட நூல் ஒன்று வெளியீடப்படுவதுடன், மூத்த சமாதான நீதிவான்கள் சிலர் கௌரவிக்கப்படவும் உள்ளார்கள். இந் நிகழ்வு 2014.03.02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பதியுத்தீன் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வு காதி நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் என்.எம். இஸ்மாயில்  தலைமையில் இடம் பெறவுள்ளதுடன் பிரதம அதிதியாக  சட்டத்தரணி எம்.சி.எம்.நவாஸ், கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில், விஷேட அதிதியாக பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஸீல் ஜே.பி, சிறப்பதிதியாக கிழக்கு மாகாண சமாதான நீதிவான் சங்கத்தின் தலைவர் எ.எல்.எம்.பாயிஸ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். 


No comments

Powered by Blogger.