Header Ads



புதிய நியமனத்தில் சித்த மற்றும் யூனானி வைத்தியர்களுக்கு பாரபட்சம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

சுதேச வைத்தியத் துறையைச் சேர்ந்த சுமார் 183 வைத்தியர்களுக்கு இன்று (20) சுதேச வைத்தியத்துறையினால் நியமனங்கள் வழங்கப்பட்டன.

மேற்படி நியமனத்தில் ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்கள் அடங்கிய 183 பேரில் யூனானி மற்றும் சித்த வைத்தியர்கள் 54 பேருக்கு அவர்களது நியமனம் வடகிழக்கில்தான் என குறிப்பிட்டு தற்போது நியமனத்தை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனையவர்களுக்கு நாடாளவிய ரீதியில் நியமனங்கள் வழங்கும்போது யூனானி வைத்தியர்களுக்கு மட்டும் வடகிழக்கில் கடமையாற்றுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2002 ஆண்டு மேற்படி வைத்தியத்துறையிரில் மொழி ரீதியாக நியமிக்கவேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிராக யூனானி வைத்தியர்களால் வழக்கு தாக்கள் செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு அந்நடைமுறை நீக்கப்பட்ட போதிலும் தற்போது ஆயுர்வேத ஆணையாளரால் வைத்தியர்களின் உரிமை மறுக்கப்பட்டு வடகிழக்குக்கு மட்டுமே யூனானி மற்றும் சித்த வைத்தியர்களின் நியமனங்கள் வழங்கப்படும் என காட்டமாகாக் கூறப்பட்டதற்கு எதிராக இன்று வழங்கப்பட்ட நியமனங்களில் குறித் 54 வைத்தியர்களும் நியமனத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஆணையாளரின் கூற்று வைத்தியர்களை பெரிதும் பாதித்துள்ளதாகவும் இது தொடர்பாக தாம் சகலருக்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 54 வைத்தியர்களும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நியமனங்கள் இன்று (20) மகரஹம ஆயுர்வேத திணைக்களத்தில் வைத்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.