Header Ads



கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதி - இலங்கை வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


Nf - (பங்களாதேஷ்) BPL ஆட்டநிர்ணய சதி: இலங்கை வீரர் உட்பட மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டிகளில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் டாக்கா க்ளாடியேட்டர் அணியின் உரிமையாளர்களில் ஒருவருக்கு தொடர்பு இருப்பது சிறப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மூவர், தமக்கும் இந்த ஆட்ட நிர்ணயத்தில் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில் டாக்கா க்ளாடியேட்டர் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷினாப் ஜிஷான் சௌத்ரி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆட்டநிர்ணயத்தில் தமக்கும் பங்கிருப்பதாக நியூசிலாந்து வீரர் லோ வின்சண்ட், இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றும் பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் அஷ்ரபுல் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஷினாப் ஜிஷான் சௌத்ரிக்கு இன்னும் இரண்டு வாரங்களில் தண்டனை அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றைய 6 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

35 வயதான துடுப்பாட்ட வீரர் வின்சன்ற், BPL போட்டிகளில் குல்னா ரோயல்ஸ் அணி சார்பாக விளையாடியிருந்தார்.

இவர் நியூசிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 23 டெஸ்ட் போட்டிகளிலும் 109 ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

31 வயதாகும் இலங்கை வீரர், 4 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை சார்பில் பங்கேற்றுள்ளார்.

ஆரம்பத்தில் BPL  ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளில் 9 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்த போதும், தற்போது 6 பேர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டாக்கா க்ளாடியேட்டர் மற்றும் சிட்டகொங் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமைக்காக அஷ்ரபுல்லிற்கு 12,800 டொலர்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.