Header Ads



வடகொரியா அணுகுண்டை அழிக்க கம்ப்யூட்டர் வைரஸ் - தென்கொரியா திட்டம்

ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்க ஸ்டக்ஸ் நெட் என்ற வைரஸ் ஏவி விடப்பட்டது. அதே போல வட கொரியாவின் அணுஆயுத செயல்பாட்டை செயல் இழக்க செய்யும் வகையில் கம்பயூட்டர் வைரசை ஏவி விட தென்கொரியா திட்டமிட்டு உள்ளது.

இதற்காக கம்யூட்டர் நிபுணர்களை ரகசியமாக தயார்படுத்தி உள்ளது. இந்த வைரசை வட கொரியாவில் அணு குண்டு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கம்யூட்டர்களில் எப்படியாவது நுழைய செய்து அவற்றின் செயல்பாட்டை முற்றிலும் தடுக்க செய்வதே இந்த திட்டமாகும்.

வடகொரியாவும் , தென் கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. வட கொரியா 2006–ம் ஆண்டு தங்களிடம் அணுகுண்டு இருப்பதாக அறிவித்தது. இந்த அணுகுண்டை தங்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தும் என்று தென் கொரியா பயப்படுகிறது. எனவே தான் வட கொரியா அணு ஆயுத செயல்பாட்டை எப்படியாவது தடுக்க தென் கொரியா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

No comments

Powered by Blogger.