பொஸ்னிய நாட்டவரின் அபூர்வ சாதனை (படம் இணைப்பு)
பொஸ்னிய நாட்டவர் ஒருவர் தனது உடலில் அனைத்து பொருட்களையும் ஒட்ட வைக்கும் திறன் கொண்டிருக்கிறார்.
இது பொருள் மீதான எமது சிந்தனையை பொறுத்திருக்கிறது என்று 56 வயது முஹ்மிஜா புல்ஜுபாசிக் என்ற அந்த காந்த மனிதன் குறிப்பிட்டுள்ளார். விசேட சக்தி மூலம் தம்மை மனித காந்தமாக மாற்றிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனது இந்த விசேட திறனை புல்ஜுபாசிக் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துள்ளார்.
இதில் அவர் எந்த முன்னேற்பாடும் இன்றி கரண்டி, கத்தி என சமையலறையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் தனது உடல், முகம் என எங்கும் ஒட்டவைத்துக் கொள்கிறார்.
எனினும் இது வெறுமனே காந்த சக்தியால் மேற்கொள்ளப்படுவதாக கூற முடியாதுள்ளது. ஏனெனில் குறித்த நபர் கையடக்க தொலைபேசி, தொலைக்காட்சி, தன்னியக்க கருவி என ப்ளாஸ்டிக் பொருட்களையும் உடலில் ஒட்ட வைத்துக்கொள்கிறார்.

Post a Comment