சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம்
சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று புதன்கிழமை (26) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியாப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஆனந்த பொடிகம மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அதனை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர், கல்முனை மாநகர முதல்வரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தம் செய்யும் திட்டத்திற்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் 13 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
கல்முனை முதல்வர் நிசாம் காரியாப்பர் விடுத்த வேண்டுகோளையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கான மேலதிக நிதியை கல்முனை மாநகர சபை ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார்.



Post a Comment