மாகாண மேசைப் பந்துப் போட்டிக்கு அக்கரைப்பற்று சன்றைஸ் கழகம் தெரிவு
(ஏ.ஜி.ஏ.கபூர்)
இவ் வருடத்திற்கான மாவட்ட மேசைப் பந்துப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டுக் கழகம் இந்த வருடமும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்மாந்துறை விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அம்பாரை மாவட்ட மேசைப் பந்துப் போட்டியில் விளையாடிய அக்கரைப்பற்று பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற போட்டியில வெற்றி பெற்ற அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட மேசைப் பந்து சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் அணியினர் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட மேசைப் பந்துப் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டதோடு, நடுவராக சம்மாந்துறை விளையாட்டு உத்தியோகத்தர் ஸப்ரி நஸார் கடமையாற்றினார்.
இவ் மாவட்ட இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டுக் கழகம் சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்துடன்; மோதியது குறிப்பிடத்தக்கது.
கழகத்தின் போஷகரும், நியூகெமி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.என்.எம்.நபீல், வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மாவட்ட மேசைப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்று மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட சன்றைஸ் விளையாட்டுக் கழக வெற்றி வீரர்கள் கழகத்தின் போஷகரும், நியூகெமி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.என்.எம்.நபீல், விளையாட்டுக் குழுக் கப்டன் எம்.எச்.ஜெய்னுதீன், பொருளாளா எம்.ஏ.சீ.எம்.றியாஸ், உப செயலாளர் ஏ.ஏ.நஜீப்; ஆகியோருடன் படத்தில் காணப்படுகின்றனர்.

Post a Comment