Header Ads



எகிப்து சிறையில் பெண்கள் மீதான பாலியல் கொடுமை - இராணுவ ஆட்சியாளர்களின் சாதனை

(Tho) எகிப்தில் பெண்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அரபுக்களுக்கான சர்வதேச மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 12 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்களின் குடும்பத்தார்களிடம் இருந்து தங்களுக்கு புகார் வந்துள்ளதாக மனித முரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் 200_ க்கும் அதிகமான பெண்கள் கைது செய்யப்பட்டு பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று ராணுவ  அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் எகிப்த்தின் தற்போதைய ராணுவ அரசு அல்- அழர் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் 6 பேரை கைது செய்துள்ளது என்றும் அந்த பெண்கள் அமைப்பு தெரிவத்துள்ளது. கைது செய்த பெண்களில் 15 வயதிற்கும் குறைவான சிறுமிகளும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்த பெண்களும் அடங்குவர் என்று அவ்வமைப்பு துருக்கிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அல்-நாசெர் நகரின் 6 பெண்களை கைது செய்து 5 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேலும் கடந்த வெள்ளி அன்று மட்டும் 40 பெண்கள் ராணுவ அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள் கைது செய்யப்பட அந்த தருனட்திலிருண்ட்து அவர்கள் மீது கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக ராணுவ அரசுக்கு எதிராக [போராடும் பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் கைது செய்யப்பட்டவுடன் அவர்களை ராணுவம் சரமாரியாக அடிக்கிறது என்றும் பெண்களின் முக்காடுகள் அவழ்கப்பட்டு அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அப்பெண்களின் ஆடைகளை களைந்து கைது செய்யும் அதிகாரி அவர்களின் அந்தரங்கத்தை தொட்டு பாலியல் ரீதியாக கொடுமை படுத்துகின்றனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அதிகாரிகள் அவர்களின் அந்தரங்கத்தை தொட்டு பாலியல் கொடுமையை நிகழ்த்துவதாகவும் மேலும் அல்-க்னடெர் சிறைக்கு அனுப்பப்படும் முன் அவர்களின் கன்னித்தன்மையை பரிசோதிக்கின்றனர் என்றும் அவர்களை பொது குற்றவாளிகளுடன் அடைத்து வைக்கப்படுகின்றனர் என்றும் தெரிவத்துள்ளது.

இதற்கு எகிப்தின் ராணுவ அரசின் உள்துறை துணை அமைச்சராக இருக்கும் அலி டமர்தாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் எகிப்து சிறை சர்வதேச மனித உரிமையை மதிக்கிறது என்றும் இந்த குற்றசாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளார். ஆனால் எகிப்த்தின் தற்போதைய ராணுவ அரசு அப்பாவிகளை கைது செய்து பல கொடுமைகளை சிறையில் நிகழ்த்துகிறது என்று சர்வதேச மனித உரிமை ஆணையங்கலான ஆம்நெஸ்டி மற்றும் ஹுமன் ரைட்ஸ் வாட்ச்  ஆகிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்படத்தக்கது.

No comments

Powered by Blogger.