மோடி ஆண்மையற்றவர் - சல்மான் குர்ஷித்
(Inne)
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறிய கருத்துக்கு
பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் தன் கருத்தை வாபஸ் பெற சல்மான் குர்ஷித் மறுத்து விட்டார்.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் குர்ஷித் குஜராத் கலவரங்களை பற்றி பேசும் போது 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் போது அப்பாவி மக்களை யார் யாரோ கொலை செய்த போது மோடி அதை தடுக்க தவறி விட்டார் என்று விமர்சித்தார். மேலும், கலவரத்தை தடுக்க தவறிய மோடி Impotent மனிதர் என விமர்சனம் செய்தார். Impotent எனும் வார்த்தை ஆங்கிலத்தில் செயலற்றவர் என்பதற்கு குறிப்பிடுவதை போல் ஆண்மையற்றவர் என்பதற்கும் குறிப்பிட பயன்படுகிறது.
சல்மான் குர்ஷித்தின் விமர்சனத்திற்கு பாஜக தலைவர்கள் பிரகாஷ் ஜாவேத்கர், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் உசேன் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் தன் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கும் பயிற்சி இது தானா என்றும் சோனியா இவ்வார்த்தைகளை ஒத்துக் கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினர்.
இச்சூழலில் தான் மோடியை அகாராதிப்படி உள்ள அர்த்தத்தில் செயலற்றவர் என்றே விமர்சனம் செய்ததாகவும் மோடி தான் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய தவறியதாலேயே தாம் அவரை செயலற்ற ஆண்மகன் என சொன்னேன் என்று கூறியுள்ள சல்மான் குர்ஷி தன் கருத்தை வாபஸ் பெற போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Post a Comment