Header Ads



அஸாத் சாலியின் பகிரங்க சவால்

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (19.02.14) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

நாட்டில் பால் மா பிரச்சினைக்கு இன்னும் தட்டுப்பாடு நீங்கவில்லை. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணன்டோ இவ்வளவு காலமும் கூறிய விடயம் 21 கொள்கலன் பால் மா தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்று. ஆனால் அவை இன்று எங்கே? இந்த நாட்டில் பசியால் அழும் குழந்தைகளுக்கு பால் மா வழங்க வக்கில்லாத ஒரு அரசு தான் ஆட்சியில் உள்ளது. இப்படி ஒரு அரசு இந்த நாட்டுக்குத் தேவையா? அது மட்டுமல்ல இன்று சந்தையில் மிகவும் தரக்குறைவான சீனித் தன்மை அதிகம் கொண்ட பால் மா வகைகள்தான் விற்பனையில் இருப்பதாக இலங்கை ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தரக்குறைவான பால் மா 450 கிராம் எடை கொண்ட பக்கற் 295ஃ- வுக்கும் ஒரு கிலோ எடை கொண்ட பக்கற் 690ஃ-க்கும் விற்பனையாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாமல் பேபி ஏறுகின்ற மேடைகளில் எல்லாம் நாங்கள் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினோம். உர மானியம் வழங்கினோம் என்று இடை விடாமல் உளரிக் கொண்டு திரிகிறார். விவசாயிகளுக்கு இவர்கள் என்ன உரத்தை கொடுத்தார்கள் என்பதை இந்த நாடே அறியும்.அனைத்தும் ஆர்சனிக் விஷம் கலந்த உரம். அது கூட உரிய விலையில் வழங்கப்படவில்லை. கூடிய விலை கொடுத்து பெற்றுக் கொள்ளவும் விவசாயிகளால் முடியவில்லை. இதை மறைப்பதற்கு தான் நாமல் பேபி எதிர்க்கட்சிகள் தமக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் கூறித் திரிகின்றார்.

இந்த ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் ஜனாதிபதி.அவர் எந்தப் பிரச்சினையையும் காலம் தாழ்த்துவதில்லை.உடனடியாக தீர்வு காண்கின்றார் என்றெல்லாம் அமைச்சர்கள் கூறித் திரிகிறார்கள். இந்த நாட்டில் 30 வருட யுத்தம் நிறைவடைந்த பின் மக்கள் எதிர்நோக்கிய ஏதாவது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசு கட்டிக் கொடுத்த வீடுகளைக் கையளிப்பதில் உள்ள பிரச்சினை இன்று வரை தீர்த்து வைக்கப்பட்டதா? ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக இருந்தால் ஏன் இதை செய்திருக்க முடியாது. தனது அரசால் வீடுகளைக் கட்டி சரியாகப் பகிர முடியாத நிலையில் இன்னொரு அரசால் வழங்கப்பட்ட உதவிகளைக் கூட மக்களுக்கு வழங்க முடியாத கையாலாகாத ஒரு அரசாகத் தான் இந்த அரசு உள்ளது. ஒரேயொரு அமைச்சரை காரணம் காட்டி அவரைத் திருப்தி படுத்துவதற்காக மக்களுக்கு சேர வேண்டியதை அரசு தடுத்து வருகின்றது. இந்த அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறாத ஒரு அரசல்ல. அது அவர்களுக்கு ஒரு பெரிய விடயமே அல்ல. எனவே சுனாமி வீடுகளைக் கையளிப்பதில் அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பௌத்த தீவிரவாதத்துக்கு அடிபணிந்து சிங்கள வாக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதால் தான் இந்த நிலை காணப்படுகின்றது. சரியானதை சரியான முறையிலும் நியாயமான முறையிலும் செய்வதற்கான  தலைவர் ஒருவர்தான் இந்த நாட்டுக்கு தேவை. ஒரு சிறிய கூட்டத்தவர்களை திருப்திப்படுத்தும் ஒரு ஜனாதிபதி இந்த நாட்டுக்கு தேவையில்லை.

முன்னாள் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில இம்முறை தேர்தலில் போடடியிட மக்களிடம் 100 ரூபா வீதம் பிச்சை கேட்டுள்ளார். இவர் சம்பாதித்ததும் பெற்றுக் கொண்ட கமிஷன்களும் போதாது என்றா இப்போது மக்களிடம் பிச்சை கேட்கவும் தயாராகிவிட்டார். இம்முறை மாகாண சபையில் தேர்தல் சட்ட விதிகளை அவர் தான் முதன் முதலாக மீறியுள்ளார். அது எப்படி என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைக் கொண்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்துள்ளமை அவர் இழைத்துள்ள மாபெரும் தேர்தல் குற்றமாகும். அரசாங்க அதிகாரிகள் கட்சி சார்பாக செயற்பட முடியாது.அவர்கள் அரசியலில் நேரடியாக பங்கேற்க முடியாது.ஆனால் இவற்றை எல்லாம் இந்த முறை மட்டும் அல்ல கடந்த தேர்தலின் போதும் முதற் தடவையாக மீறியவர்கள் இவர்கள் தான். இது மட்டும் அல்ல உதய கம்மன்பில எந்த எந்த காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார். கடந்த மாநகர சபை தேர்தலின் போது அவர் செய்தது என்ன என்பது பற்றிய எல்லா விவரங்களும் எனக்கு தெரியும். அவருக்கு துணிவிருந்தால் ஒரு பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால் வடுகின்றேன். அவரின் வண்டவாளங்கள் அனைத்தையும் தண்டவாளத்தில் ஏற்ற என்னால் முடியும். ஆனால் அவர் நிச்சயம் இந்த சவாலை ஏற்க மாட்டார். ஒரு தடவை அவர் என்னோடு தொலைக்காட்சி மூலம் விவாதத்துக்கு வந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்ததை மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். 13வது திருத்தச் சட்ம் தேவையில்லை,அதிகாரப் பகிர்வு அவசியமில்லை, மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூச்சலிடுகின்றவர்கள் இன்று எந்த முகத்தோடு மாகாண சபை தேர்தலில் போட்டியிட மக்களிடம் பிச்சை கேற்கின்றனர்? அது மட்டுமன்றி இவர் மனைவி மகன் என எல்லோரையும் மாகாண சபையில் இணைத்துக் கொண்டு இன்று குடும்ப வண்டியே மாகாண சபையால் தான் ஓடுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்நதிர கட்சியும் இன்று மோசமான வங்குரோத்து நிலைக்கு சென்றுவிட்டது. அதனால் தான் தங்களது கட்சியை சேர்ந்த ஒருவர் இன்றி கொழும்பு மாவட்டத்துக்கு தலைமை தாங்கும் பொறுப்பு தற்போது உதய கம்மன்பில போன்ற ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் ஊடகங்களுக்குத் தெரியாத ஒரு இரகசியத்தையும் நான் இங்கு கூற விரும்புகின்றேன். இவரும் ரத்தன தேரரும் சென்று கரு ஜயசூரியவை சந்தித்து இந்த மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் உதய கம்மன்பிலவை போடடியிடச் செய்வதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அது சரிவரவில்லை. இதை எப்படியோ தெரிந்து கொண்ட அரசாங்கம் இவரை விட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் கொழும்பு மாவட்டத்தின் தலைமை பதவியை அவருக்கு கொடுத்து தனது பிடியில் தொடர்ந்தும் வைத்துள்ளது. இதுதான் ஊடகவியலாளர்களான உங்களுக்குத் தெரியாத அந்த இரகசியம்.

அமைச்சர் கெஹலிய றம்புக்வல்ல ஒரு புதுமையான விடயத்தை கூறுகின்றார். அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் நற்பு நாடுகள் இணைந்து இலங்கைக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை முன்வைக்க உள்ளனவாம். இது அவர் காணும் கனவாகத் தான் இருக்க முடியும். தற்போது சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு மாலைதீவில் நடைபெறுகின்றது. சார்க் வலயம் தான் இலங்கைக்கு மிகவும் கிட்டிய ஆதரவு வலயம்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு அமைச்சர்கள் இலங்கை விடயத்தில் ஜெனீவாவில் எவ்வாறான ஒரு நிலைபாட்டை எடுப்பது என குழம்பிப் போய் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த லட்சனத்தில் இலங்கைக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை எப்படி ஜெனீவாவில் எதிர்பார்க்க முடியும? இம்முறை வரப் போவது சாதாரண ஒரு தீர்மானமாக இருக்க முடியாது. நவநீதம் பிள்ளை இதற்கான சமிக்ஞையை ஏற்கனவே வழங்கிவிட்டார். அவர் இலங்கைக்கு எதிராக 74 விடயங்களை முன்வைத்துள்ளார். இனங்களுக்கு இடையில் வெறுப்பு குரோதம் என்பனவற்றை ஏற்படுத்துகின்றவர்களை தடை செய்யும் சட்டம் விரைவில் அமுல் செய்யப்பட வேண்டும். அந்த சட்டம் வந்தால் பொது பல சேனா,ராவண பலய எல்லவற்றுக்கும் சாவு மணி அடிக்கப்படும். மனிதப் புதைகுழிகள் பற்றி விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. இன்று நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்தத் தேவைக்கும் நிலத்தை தோண்ட முடியாத மோசமான நிலை. தோண்டினால் உள்ளே இருந்து மனித எழும்புக் கூடுகளும் எச்சங்களும் தான் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற இன்னும் பல விடயங்களை முன்னிலைப்படுத்தி அவர் அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நவநீதம் பிள்ளையும் மற்ற அமெரிக்க பிரமுகர்களும் வருகை தரும் போது அவர்களை கட்டிப் பிடித்து வரவேற்கின்றனர். காலில் விழாத குறையாக அவர்கள் முன்னிலையில் கூனிக்குறுகி நிற்கின்றனர். சில அமைச்சர்கள் அவர்களை திருமணம் செய்யவும் தயார் என்று உளறுகின்றனர். அனால் அவர்கள் போனபிறகு அவர்களிடம் அப்படி சொன்னோம் இப்படி சொன்னோம் என்று உள்ளுர் மக்களிடம் வாய்ச்சவடால் விடுக்கின்றனர். இந்த அளவுக்கு ஒரு பைத்தியக் கார அரசு இந்த உலகத்தில் எங்குமே இருக்க முடியாது.

இந்த நாட்டின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வேன்.அதற்கப்பால் சென்றும் அதிகாரங்களைப் பகிரத் தயாராக உள்ளேன் என்று சர்வதேசத்துக்கு பறைசாற்றியவர் வேறு யாருமல்ல ஜனாதிபதி தான் இவ்வாறு சுறினார். அதை செய்யுமாறு தான் இன்று சர்வதேச சமூகம் வலியுறுத்துகின்றது. அதை தான் அரசிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றது. இதை அரசாங்கம் சரியாக விளங்கிக் கொள்ளத் தவறியுள்ளது. அதுதான் இன்றைய பிரதான பிரச்சினை ஆனால் ஜனாதிபதி தனது எதிர்கால பதவிக் காலத்தை கருத்திற் கொண்டு அதை செய்யத் தயாரில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே தெளிவாகக் கூறியுள்ளார். அப்படியானால் அரசு பிரச்சினையை எதிர்நோக்குவதும் தவிர்க்க முடியாமல் போய்விடும்


No comments

Powered by Blogger.