Header Ads



ஆற்றில் தவறி விழுந்து வபாத்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றில் செவ்வாய்க்கிழமை (25)   தவறி விழுந்து  செம்மண்னோடைக் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹிர் இஸ்மாயில் (வயது 34) என்பவர் உயிரிழந்ததாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழிலில் ஈடுபடும் இவர், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக சனிக்கிழமை (22) சென்று திங்கட்கிழமை  (24) கரையை அடைந்தார். இந்நிலையில்,  வலைகளை படகிலிருந்து  சிக்கெடுத்துக்கொண்டிருந்தபோது   அப்படகிலிருந்து இவர் தவறி விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர். 
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவர் 03 பிள்ளைகளின் தந்தை ஆவார்.  இது   தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.