இலங்கை முஸ்லிம்களுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் அகதி அந்தஸ்து வழங்குமா..?
(றிசானா பசீர்)
அமெரிக்க துாதரகத்துக்கும், பிரித்தானிய துாதரகத்துக்கும் இலங்கை மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் பற்றியும் அகதி அந்தஸ்து பற்றியும் ஒரு மின் மடலை பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். அதற்கு பதிலும் கிட்டியது.
அமெரிக்கா, ஜெனிவாவில் மனித வதை பற்றிப் பேசப்போகின்றது. ஆனால் இவர்கள் மிருக வதை பற்றிப்பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மனித வதைக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆனால் மிருக வதைக்கு தண்டனை கிடையாது.
அரசியல் வேறு மதம் வேறு. கல்வி வேறு கலாச்சாரம் வேறு. எனவே மதத்தை அரசியல் மயப்படுத்தக்கூடாது.புத்தர் மாடறுப்பதை நிறுத்துமாறு சத்தியக்கிரகம் இருந்தாரா? போக்குவரத்துப் பாதைகளை வழிமறித்தாரா? பள்ளிவாசல்கள் மீது கல்லெறிந்தாரா ? இல்லவே இல்லை. அவர் போதனையெல்லாம் சத்தியம். அஹிம்சை. ஆனால் இன்றைய பிக்குகள் அரசுக்கு தலையிடி கொடுப்பதும் மற்ற மதங்களை கிள்ளி விளையாடுவதுமே.
அமெரிக்கா பிரித்தானியா போன்றதல்ல இலங்கை. இது ஒரு மனவளர்ச்சி குன்றிய நாடு. உலகில் துவேஷத்தில் இலங்கைக்கே முதலிடம். பள்ளிவாசலின் நடுச்சுவருக்குள் புத்தர்சிலையை நடும் நாகரீகம் அற்ற நாடு. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை ஆக்க நினைக்கின்றது அரசாங்கம். ஒரு நாளும் அதிசயமாக மாறாது. மாறாக ஆசியாசின் அசிங்கமாகத்தான் மாறும்.
இலங்கை முஸ்லிம்கள் எவரும் அடிப்படைவாதிகளோ இனவாதிகளோ தீவிரவாளிகளோ அல்லர். அதிக மத பக்தி வாய்ந்தவர்கள். நாங்கள் ஒசாமா பின் லேடனோ தலிபான்களோ அல்லர். அவர்கள் சுவட்டில் செல்லவும் இல்லை. மற்ற மதத்தவரின் பிரேதம் வீதியில் வரும் போது எழும்பி நின்று மரியாதை செலுத்துமாறு கட்டளை வழங்கும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். முஸ்லிம்களின் முழு நேரமும் கல்வி வியாபாரம் விவசாயம் கடற்தொழில் என்றே கழிகிறது. இலங்கையின் எந்த இடத்திலும் முஸ்லிம்கள் ஆயுதப் பயிற்சி எடுக்கவுமில்லை வழங்கப்படவும் இல்லை.
அரசு மீது அணுவளவும் நம்பிக்கையற்ற தமிழ்ச்சமுகம் இன்று அமெரிக்கா பின்னால் அணிதிரண்டு கொண்டிருக்கின்றது. எங்களுக்கு ஒரு உண்மைமட்டும் தெரியும் பௌத்த பிக்குகள் எம்மை நிம்மதியுடன் வாழவிடப்போவதில்லை.அரசும் அவர்களுக்கு முட்டுக் கட்டையோ கடிவாடமோ இடப்போவதில்லை. சிங்கள மக்கள் எமக்கு எந்தத் துன்பம் தந்தாலும் பொறுத்தக் கொள்ள வேண்டும். பொறுமையுடையோரே மேலோங்குவர். பொறுமை எல்லை மீறும் போது நாங்கள் ஆயுதமேந்தி போராடப்போவதில்லை. பதிலாக இந்த நாட்டை விட்டு வெளியேறுவோம்.
ஆகையால் அமெரிக்கா பிரித்தானியா போன்றவை இலங்கை முஸ்லிம்களை தன்உடன்பிறப்புக்கள் போன்று நேசிக்க வேண்டும். நாங்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் புக வாசல் என்றும் திறந்த வண்ணமே இருக்க வேண்டும். பள்ளிவாசல்களுக்கு கல்லெறிவது கோயில்களை இடிப்பது சேர்ச்சுக்குள் புகுந்து கிறிஸ்தவர்களை விரட்டியப்பது என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
எது எவ்வாறாயினும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கை முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நாம் திடமாக நம்புகின்றோம்...!

றிசானா பஸீர்,உண்மையில் நல்ல ஆக்கமிது.அப்படியே இதனை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாற்றம் செய்து ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பினால் அதிமிக சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஇங்கே கொடுக்கப்பட்ட குறிப்புக்களை வைத்தே நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திர இலங்கை என்ற தலைப்பில் எதிர்வு கூறியிருந்தோம்,அதாவது யுத்தம் முடிந்த கையோடு "தமிழர்களின் கதை முடிந்தது அடுத்த கட்டமாக இலங்கை முஸ்லிம்களை ஒரு கை பார்க்கனும்"என்று அப்போது சரத் பொன்சேகா இரானுவ தளபதியாக இருக்கும்போதே பத்திரிகைகளில் பொட்டெழுத்துக்களில் தலைப்பாக துவேசிகள் பேசியது வந்தது.
தவிர,சரத் பொன்சேகாவும்"சிருபாண்மையினர் தஞ்சமடைந்தவர்களாகவே இலங்கையில் இருக்கனும்,உரிமைகள் சலுகைகள் என்று வரக்கூடாது" என்று கூறியிருந்தார்,அது நாடாளுமன்றத்தில் பிரச்சினையாக சென்றபோதும் பொன்சேகாவின் கருத்துக்கு நாங்கள் பதில்,விளக்கம் சொல்ல முடியாது,அதனை நீங்கள் அவரிடமே பாருங்கள் என்று அரசும் பகிரங்கமாக பொன்சேகாவை கண்டிக்காமல் சொன்னதும் நம் எல்லோருக்கும் நினைவிலிருக்கும்.
நாங்கள் என்ன சொன்னோமெனில்,இலங்கையில் யுத்தம் முடிந்தாலும் இது ஒருபோதும் ஐக்கிய நாடாக,ஜனனாயக நாடாக,அமைதிபொங்கும் நாடாக,மனித நேயமான நாடாக ஒருபோதும் மாறாது,பிரச்சினைகளும் அடாவடிகளும் முடிவிலியாக இருக்கும் என்று.ஏனெனில்,இலங்கையில் சிங்கள அரசு சிங்களவருக்கு மிக கூடிய பாரபட்சமான சலுகைகளை வழங்கியுள்ளது,எந்த முடிவும் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் வேளையிலும் அது சிங்களவரை மையமாக கொண்டே எடுக்கபடுவதும் ஒருனாளும் இனப்பிரச்சிணைகளை முடிவுக்கு கொண்டுவராது. சுயனலம் பார்க்காத அரசு என்றிருந்தால்,தனிச்சிங்கள சட்டமோ,அல்லது இலங்கையின் கருமமொழியாக ஆங்கிலத்தை மட்டும் பிரகடணப்படுத்துவதில் பின்வாங்களோ வந்திருக்காது.
இலங்கையின் சமாதாதனத்திற்கான சிறந்த வழி என்ன என்ற சிறச டீவியின் நிகழ்சியில்,எங்களைப்போன்ற பலரும் ஆங்கிலத்தை இலங்கையின் பொதுவான,கரும பீட மொழியாக மாற்றனும் என்ற கருத்தை முன்மொழிந்தார்கள்.உண்மை தெறிந்த சிங்கள அரசு அதனை இற்றைவரை செயட்படுத்த வில்லை,காரணம்,அதில் பாதிக்கப்படப்போவது சிங்களவர்கல் மட்டுமே என்பதும் அரசுக்கு நன்கு தெறியும்.சிங்கப்பூரின் வளர்சியை வைத்தே பல கல்விமான்கள் இக்கருத்தை சொன்னார்கள்,ஆனால் பலனில்லை.
எனவே,யாரும் இலங்கையில் ஒரு சுதந்திரம் வருமென்றோ,உங்களின் பாராளுமன்ற பிரதினிதிகள் உங்கள் பக்கமே இருப்பார்கள் என்றோ கணவு காணவேண்டாம்.ஆங்கிலேயரிடமிருந்துதான் இலங்கை சுதந்திரமடைந்ததே தவிர அது ஒன்ரும் சுதந்திர நாடு இல்லை.இந்த உண்மையை விளங்க மருக்க்ன்ற முஸ்லிம்கள் கூட,கடந்த 66வது தினத்தில் பெரும் விமர்சையாக அதனை கொண்டாடினார்கள்.தங்களுக்கு கொடூரமான அசௌகரியமான சுதந்திரமற்ற வாழ்க்கை செலவும் அதிகூடிய இந்த நரக வாழ்வை உலகுக்கு நன்கு எடுத்து சொல்லும் திருனாளாக அந்த 66வது தினத்தை பயன்படுத்தியிருக்கலாம்,ஆனால் எந்த புத்திச்சாலியும் செய்யவில்லை.ஆனந்த சங்கரி மட்டும்,நிரைவேற்றப்படாத வாக்குருதிகள் என்ற தலைப்பில் 66வது தினத்தில் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தி மடலொன்றை அனுப்பினார்.
இன்னும் இருக்கு,இப்போ இது போதும்.................
இதைத்தான் முன்னர் நான் குறிப்பிட்டபொழுது என் கருத்தை கேலிசெய்து அரசாங்கத்திர்கு முன்னர் குடைபிடித்தவர்கள்தானே நீங்கள் அரபி நாடுகளுக்கு பறந்து பறந்து ஆதறவு கேட்டீர்கள் கொள்ளப்பட்டது அனைத்தும் புலிகள்தான் பொதுமக்கள் ஒருவரும்இல்லை என்றீர்கள் நீங்கள் நீங்களாகவே இல்லை அல்லாடுகிறீர்கள்
ReplyDeleteறிசானா பசீர்,
ReplyDeleteஅமெரிக்கா பல இலங்கை முஸ்லிம்களுக்கு புகலிடம் கொடுத்து இருக்கிறது. இன்னும் கொடுக்கும் அதில் உங்களுக்கு ஐயம் வேண்டாம்.
அகதி அந்தஸ்த்து பெற்ற இலங்கை முஸ்லிம்கள் சிலரை நான் தனிப்பட்ட விதத்தில் அறிவேன். இவர்களில் சிலர் தாம் புலிகளுக்கு எதிராக இயங்கியதால் புலிகளால் வஞ்சிக்கப்படுவதாய் அகதி அந்தஸ்து பெற்ரவர்கள். சிலரோ புலிகளுக்கு உதவி செய்ததாக சிங்கள அரசால் ஐயப்பாட்டுடன் வஞ்சிக்கப்படுகிறார்கள் என அகதி அந்தஸ்து பெற்றவர்கள். இன்னும் சிலரின் நிலையோ பரிதாபமானது. ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாய் கொடிபிடித்து அமைச்சரை நட்பாக்கி அந்தச் செல்வாக்கில் அமெரிக்கா வந்து இப்போது ரூரிஸ்ற் விசா முடியும் தறுவாயில் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். அகதி அந்தஸ்து கிடைக்க இவர்கள் சொல்லும் காரணம் ஸ்ரீலங்கா அரசால் தமக்கு பிரச்சினை என. இதனால் இவர்களை அழைத்து வந்த அரச ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஐநாவில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாய் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொடிபிடிப்பு...ஆனால் அகதி அந்தஸ்த்து மட்டும் சாத்தான் நாட்டில்.