இந்த தேர்தலில் நாங்கள் 5 ஆசனங்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது - றிசாத் பதியுதீன்
கொழும்பில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு எமது கட்சி செயற்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்தவொரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கத்துக்குள்ளும்,வெளியிலும் எமது குரல் ஒலிக்கும் என்றும் கூறினார்.
மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதன் முறையாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று மாலை இடம் பெற்றது.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தகவல் தருகையில்-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எமது கட்சி மிகவும் மக்களின் விசுவாசத்தை பெற்றுள்ளது இதன் மூலம் பாராளுமன்ன்றத்திலும்,மாகாண சபைகளிலும்,உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றிலும் அதிகமான ஆசனங்களை கொண்டுள்ளது.இது வே சான்றாகும் மக்கள் எமது கட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
ஊடகவியலாளர் ஒரு கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,எந்த கட்சியினையும் அழிப்பதற்காக நாங்கள் போட்டியிடவில்லை.அந்ந கட்சிகளுக்கு எவ்வாறான நோக்கம் இருக்கின்றனவோ,அதே போல் எமது கட்சி கொழும்பு மாவட் சிறுபான்மை மக்களின் மேம்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் கொண்டுள்ளதால் மாகாண சபை பிரதி நிதித்துவம் மூலம் அதனை செய்வதற்காகவே போட்டியிடுகின்றோம்.இங்கு பிரபா கணேஷன் அவர்களின் வேட்பாளர்களும் எமது இந்த கட்சியில் போட்டியிடுகின்றார்கள்.பிரபா கணேஷன் அவர்களை பொறுத்த வரையில் கட்நத வடமாகாண சபை தேர்தலில் வடக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக குரல் கொடுத்தவர்.சிறுபான்மை மக்கள் தொடர்பில் தெளிவை கொண்டவர்.மக்கள் நலனில் அக்கறை கொண்டதால் எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் அரசாங்கத்திடம் சரணாகதியான அரசியலை செய்ய வேண்டும் என்றில்லை.கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகம் தொடர்பில் அரசாங்கத்திடம் பேரம் பேசும் சக்தியாக எமது கட்சி இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.அந்த விடயங்களை கொழும்பு வாழ் மக்களும் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் நாங்கள் 5 ஆசனங்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் எங்களது பயணத்தை அங்கீகரித்துள்ளனர்.எமது வேட்பாளர் பட்டியிலில் சகல இனத்தவரும் போட்டியிடுகின்றார்..அப்படியானால் எமது கட்சி தொடர்பில் இனவாதம் பேசுபவர்கள் இதனை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பதியுதீன் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,றியாத் சாலி,கட்சியின் பிரதம வேட்பாளார்கள் பாயிஸ்,நவாஸ் முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment