இனவாதிகளால் தூவப்படும் குரோதங்கள் களையப்பட வேண்டும்...!
(சத்தார் எம்.ஜாவித்)
இலங்கையில் இனங்களுக்கிடையிலான குரோத மனப்பான்மை அதிகரித்து வருவதனால் இன ஒற்றுமை என்பது நலிவடைந்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக சமாதானத்தை விரும்புபவர்கள் மத்தியில் இன்று நிம்மதியற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. சமாதானமும் ஒற்றுமையும் நிலவவேண்டிய இத்தருணத்தில் குரோதங்களும் முரண்பாடுகளும் அவற்றை முன்னோக்கிச் செல்கின்றதே தவிர குறைந்த பாடில்லை காரணம் இனவாதச் செயற்பாடுகளே இந்த இனவாதச் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டாத வரையில் இலங்கையில் நிலையானதொரு சமாதானத்தையோ அல்லது இயல்பு வாழ்க்கையையோ கண்டு கொள்ள முடியாது.
கடந்த முப்பது வருடகால யுத்தம் இடம்பெற்ற வேளையில் எல்லாம் அனைவரதும் உணர்வுகளும் சமாதானத்தையெ எதிர்பார்த்தன காரணம் அந்த யத்தத்தால் பட்ட வடுக்கள் போதும் என்பதே அவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலை மீண்டும் இலங்கையில் வந்துவிடக் கூடாது என்பதே. இவ்வாறு பல கோணங்களிலும் அமைதியை எதிர்பார்த் வேளையில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் அமைதியாக இருந்த சமுகத்தில் இனவாதக் கும்பல்கள் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட சந்தோசக் களிப்பில் பெரும்பான்மை என்ற அகர்வத்தால் தற்போது சிறுபான்மை மக்கள் மீது அடாவடித் தனங்களை ஆரம்பித்து விட்டனர்.
இனவாத பேரினவாதிகளின் தாக்குதல்கள் முஸ்லிம்களில் ஆரம்பித்து பின்னர் தமிழ் மக்கள் மீதும் தற்போது கத்தோலிக்க மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள நிலைமை இலங்கையில் ஏனைய சமகங்கள் வாழ முடியாது என்ற சமிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பேரின வாதிகளால் தீய என்னங்களும் சித்திரிப்புக்களும் திரிவுபடுத்தப்பட்டு அப்பாவி இளைஞர்களை சிறுபான்மை மக்களின் சமயங்கள் மீது ஏவிவிட்டு இயல்பு நிலையைக் குழப்பும் கும்பல்கள் சட்டத்திற்கும், நீதிக்கும் களங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவற்றை மீறி செயற்படும் நிலைமைகள் சமுக ஒற்றுமைக்கான எந்தவித சந்தர்ப்பங்களும் இல்லை என்பதனையே கோடிட்டுக்காட்டுகின்றது.
குரோத மனப்பான்மையின் உச்சக்கட்டமாக ஆரம்பமானதே 2012 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 20ஆம் திகதி தம்புள்ளை பள்ளிவாசல் மீதான மிலேச்சத்தனமான செயற்பாட்டின் காரணமாக மக்கள் பௌத்த மத்தின் மீது கொண்டிருந்த நன்மதிப்பு ஒரு சில இனவாத பௌத்த தேரர்களால் கொச்சைப்படத்தப்பட்டமை முழு மனித சமகத்திற்குமே இழுக்கை எற்படுத்திவிட்டது.
தம்புள்ளை பள்ளியின் தொடக்கம் தற்போது கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஏற்படுத்தப்பட்ட தொழுகை அறைவரை பல பள்ளிகள் மத்ரஸாக்கள், மற்றும் சமய நிறவனங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன. இவ்வாறு இனவாதிகளால் சமயத்தளங்கள் தாக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் ஜனநாயக நாடு என்ற வகையிலாவது மக்களின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாது மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பது முழு முஸ்லிம் சமகத்தினாலும் இன்று கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்ட விடயங்களாக கணிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஒரு குற்றத்தை செய்பவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியுமானால் ஏன் பகிரங்கமாக ஒரு இனத்தின் சமயத்தளங்களை தாக்கி உடைத்தவர்களை தக்க ஆதாரங்களுடன் தகவல்கள் வழங்கிய போதும் அவர்களை கைது செய்யவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தவோ அல்லது குறைந்த பட்சம் நேரடியாக அச்செயற்பாடகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமிய சமயத்தளங்களில் தீவிரவாதம் வளர்க்கப்படுவதாக இயலாத் தன்மையால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்தி பகிரங்கமாக தாக்குதல் நடத்துவதிலும், பொய்ப்பிரச்சாரம் செய்வதிலும் பேரினவாதம் செயற்படம் விதங்களை அவதாணிக்கும்போது அரச ஆதரவுடன் சில தீய கடும்போக்குச் சக்திகள் செயற்படுவதனையே ஊகித்துக் கொள்ள முடிகின்றதாக முஸ்லிம் சமயத் தலைவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இஸ்லாம் குரோதங்களையும், முரண்பாடுகளையும் வெறுக்கும் ஒரு பனிதமான மார்க்கமாகும் எந்த நேரத்திலும் நல்லதையே செய்யவும், நல்ல வழியிலேயே செல்வதற்குமான சிறந்ததொரு வழிகாட்டியாக இஸ்லாம் விளங்குகின்றது. இஸ்லாத்தின் மேற்படி நல்ல செயற்பாடுகளின் முன்நோக்கிய தொழிற்பாடே இன்று நடிகர்கள், பாடகர்கள்,கல்விமான்கள், சமயப் பொதகர்கள் என பலதரப்பட்ட அந்நிய வர்க்கத்தினரும் இஸ்லாத்தை விரும்பி அதன்பால் வரகின்றதை நாளாந்தம் காணக் கூடியதாகவள்ளது.
இலங்கையை எடுத்துக் கொண்டால் இனவாத பௌத்த அமைப்புகளால் அவர்கள் பரப்பும் மார்க்கத்தில் எத்தனைபேர் அவர்களின் மார்க்கத்தை தழுவுகின்றனர் என்றால் அதற்கு விடை பூச்சியம்தான். இவ்வாறு தமது மார்க்கத்தையே பூரணமாக விளங்கிக் கொள்ளாத பூச்சியத்தில் உள்ள ஒரு கும்பல் எவ்வாறு ஒரு சிறந்த சமுதாயத்தை எதிர் காலத்தில் தோற்றுவிப்பர்? அவர்களால் முரண்பாடுகளையும், குரோதங்களையுமே ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு வரைக் கூட அவர்களது மார்க்கத்தில் இணைத்துக் கொள்ள முடியாது.
குரோதத்தாலும் , சண்டித்தனத்தாலும் இஸ்லாத்தை அழிக்க முடியாது அவர்கள் கடல் நீரை கரண்டியால் அள்ளி கடலை வற்ற வைக்க முயற்சிக்கும் மூடர்கள்போல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து விடலாம் என்று நினைக்கின்றனர். இறைவனை வணங்கும் மனித தர்மத்தை கொச்சைப்படுத்தும் முட்டாள்களால் ஒரு அனுவளவேனும் சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது யுத்த வெற்றியின் பின்னர் சிறுபான்மைகள் என்றால் அவர்களை கிள்ளுக்கீரைகளாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக இந்த நாட்டில் இருந்தாலும் பெரும்பான்மையைவிட பண்மடங்கு உதவிகளையே இந்த நாட்டில் செய்து வருகின்றனர் குறிப்பாக அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கை முஸ்லிம்களுக்க என்றா எதனையும் வழங்குகின்றனர் இல்லவே இல்லை மாறாக அனைத்தையுமே இந்த அரசாங்கத்திடம்தானே வழங்குகின்றனர். இவ்வாறு முஸ்லிம் நாடுகள் வழங்கும் உதவிகளைக் கருத்தில் கொண்டாவது முஸ்லிம்களை சீன்டாதிருக்கலாம்தானே.
இந்த நாட்டிற்கு உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் அதிகமாக நாடுவது முஸ்லிம் நாடுகளைத்தான் என்பதனைக் கூட புரிந்து கொள்ளாத ஒரு கும்பலாகவே இனவாதக் கும்பல்கள் காணப்படுகின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்கள் தேவைப்படா விட்டால் முஸ்லிம் நாடுகளின் சகல உதவிகளையும் புறக்கணிக்கவேண்டுமே தவிர அவற்றை பெற எத்தனிக்கக்கூடாது இதுவே உண்மையான மனித இயல்பு. ஆனால் இங்கு முற்றிலும் முட்டாள்தனமான என்னங் கொண்டவர்களாக இனவாதிகள் செயற்படவது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இந்த கட்டுரை யாருக்கு எழுதப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.. முஸ்லிம்களின் பிரச்சினை என்பது இந்த ராஜபக்ச அன் கோ களால் தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்துவது அரசாங்கத்தின் கடமையல்லவா..!!!
ReplyDeleteஎன்னப்பா பள்ளிகளும் தேவாலயங்களும் உடைக்கபடுவதாக கூறுகிறீர்,ஆனால் மாமாவோ எந்த பள்ளியும் தேவாலயங்களும் உடைக்கபடவில்லை,உடைக்கப்பட்டிருந்தால் கொண்டுவாருங்கள் ஆதாரத்தை என்று பகிரங்கமாக சவால் விடுகிறார்,என்னதான் நடக்கிறது?
ReplyDeleteஇந்தப்பெரிய கட்டுரையில்,அரசுதான் இனவாதத்திற்கு முழுக்காரணம் என்பதை இன்னும் ஆழமாக வெளிப்படையாக சொல்லியிருக்கலாம் ஆனால் சொல்லத்தான் யாராளும் முடியாது,ஏனென்றால், கருத்து சுதந்திரம்,ஜனனாயகம்,சமத்துவம்......... இப்படி அகராதியை புரட்டி கருத்து பார்க்கவேண்டிய சொற்களாக இவைகள் இன்று இலங்கையில் நிலைமை மாறியிருக்கிறது.இதைதான் 180 நாடுகளைக்கொண்ட ஆய்வில் இலங்கைக்கு 165 வது இடமும்,பின்லாந்து 01வது இடத்திலும்,எரித்ரியா கடைசி இடத்திலும் பத்திரிகை சுதந்திரத்தில் இடம்பிடித்துள்ளது.
நாம்,எந்த அரசையும் பலிசொல்லி பிரயோசனமில்லை,எல்லாக்குற்றத்திற்கும் வழிவகுத்தது,பார்த்துக்கிட்டு ஆமா போட்டது,அரசுக்கும் நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கும் இருவேடம் போடும் எம் சுயனல பச்சோந்திகளான முஸ்லிம் அரசியல் வாதிகளைத்தான் நாம் குற்றம் சொல்லவேண்டும்.
அரபுலகில் நடந்த நியாயத்திற்கான போராட்டங்களைப்போல்,இலங்கையிலும் மக்கள் சக்திகள் வீதிக்கு வரனும்,நம்மவரை அடித்து துரத்தனும்.இது ஒன்ரும் அரசுக்கு எதிரான போராட்டமின்மையால்,அரச பக்கத்திலும் எந்த எதிர்ப்பும் வராது.
யார்தான் இதை செய்வர்?சமுக ஆர்வலர்கள் என்று யார்தான் இப்போ தூய மனதுடன் உள்ளார்கள்?எல்லாமே கணாக்கானும் காலங்கள்,ஏதும் என்றால்,பகுதி 01,பகுதி 02,பகுதி 03 என காட்சிகள்தான் மாறிக்கொண்டுபோகும்.